ராமேஸ்வரம் கோயிலில் கங்கை தீர்த்தம் ‛‛நோ'': பக்தர்கள் ஏமாற்றம்

Added : டிச 06, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அபிஷேகத்திற்கு கங்கை தீர்த்தம் சப்ளை இல்லாததால், பக்தர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். தீர்த்த தலமான ராமேஸ்வரம் கோயிலில் 22 தீர்த்தங்களை நீராடி தரிசிக்க தினமும் ஏராளமான வட, தென் மாநில பக்தர்கள் வருகின்றனர். இக்கோயிலில் பல நூறு ஆண்டுகளாக உத்தரகாண்ட் ஹரித்துவாரில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித கங்கை நீரை சுவாமி சிலைக்கு
ராமேஸ்வரம் கோயிலில் கங்கை தீர்த்தம் ‛‛நோ'': பக்தர்கள் ஏமாற்றம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அபிஷேகத்திற்கு கங்கை தீர்த்தம் சப்ளை இல்லாததால், பக்தர்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.

தீர்த்த தலமான ராமேஸ்வரம் கோயிலில் 22 தீர்த்தங்களை நீராடி தரிசிக்க தினமும் ஏராளமான வட, தென் மாநில பக்தர்கள் வருகின்றனர். இக்கோயிலில் பல நூறு ஆண்டுகளாக உத்தரகாண்ட் ஹரித்துவாரில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித கங்கை நீரை சுவாமி சிலைக்கு அபிஷேகம் செய்து பூஜை நடக்கும்.


மேலும் பக்தர்களுக்கு வில்வ இலையுடன் கோடி தீர்த்தமும் பிரசாதமாக வழங்குவர். இதனை கண்டு பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதி தரிசனம் செய்வார்கள். இதில் கங்கை தீர்த்தத்தை 200 மி.லி., அளவில் பித்தளை கலசத்தில் அடைத்து ரூ.50 க்கு கோயில் நிர்வாகம் விற்றது.


ஆனால் கடந்த ஓராண்டாக ஹரித்துவாரில் இருந்து நன்கொடையாளர் வழங்கிய கங்கை தீர்த்தத்தை பெற கோயில் அதிகாரி கவனம் செலுத்தாமல் கைவிட்டார். இதனால் தற்போது சுவாமிக்கு கங்கை அபிஷேகமும், பக்தருக்கு தீர்த்தம் விற்பதும் இல்லை. இதனால் பக்தர்கள் கங்கை அபிஷேகம் செய்ய முடியாமல், தீர்த்தம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.


இதுகுறித்து ராமேஸ்வரம் சேர்ந்த புரோகிதர் ராமு கூறுகையில் : கங்கை தீர்த்தத்தை பெற பல முறை வலியுறுத்தியும் கோயில் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இதனால் சுவாமிக்கு கங்கை தீர்த்த அபிஷேகம் இல்லை, பக்தர்களுக்கு சப்ளையும் இல்லை. அதிகாரிகள் ஆன்மிகத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் உள்ளதால், பாரம்பரிய மரபுகளை காற்றில் பறக்க விடுகின்றனர் என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து (4)

Kanakala Subbudu - Chennai,இந்தியா
06-டிச-202218:41:22 IST Report Abuse
Kanakala Subbudu விடியல் ஆட்சியில் ஒவ்வொரு அவலமாக வெளியே வந்து கொண்டு இருக்கிறது. இந்த லட்சணத்தில் இது ஆன்மிக ஆட்சி என்று ஜம்பம் வேறு
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
06-டிச-202218:26:54 IST Report Abuse
sankaseshan வட நாட்டில் இருந்து வரும் பக்தர்கள் தினமும் கங்கா ஜலம் கொண்டுவருகின்றனர் அபி ஷேகம் நடக்கிறது
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
06-டிச-202217:31:16 IST Report Abuse
சீனி அது என்ன பேஷ்கார், கெங்கா ? புரியிற மாதிரி அழகு தமிழ்ல எழுதலாமில்லையா ? தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என மூன்று மொழிகளிலும் எழுதினால், வடநாட்டு யாத்திரிகர்களும் பயனடைவார்கள். அலுவலக அறைகளுக்கு எண் கொடுத்திருந்தால், 1ம் எண் அலுவலகம், 2ம் எண் அலுவலகம் என எளிதாக செல்வார்கள். மீனாட்சி அம்மன் அமர்ந்த இடத்தில் அரசுக்கு 100கோடி வருவாய் ஈட்டுகிறார். ராமநாத ஸ்வாமி அதைவிட அதிக வருவாய் அரசுக்கு ஈட்டிக்கொடுப்பார் என நம்புவோம். ஆனால் விடியல் ஆட்சியில், சனாதனத்தை ஒழிப்போம், இந்துக்களை ஒழித்துக்கட்டுவோம், என ஏச்சும் பேச்சும் மட்டுமே என்பது தான் உண்மை....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X