வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: கோவிட் சமயத்தில், தொலைதூரப் பகுதிகளில் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை எடுத்து ட்ரோன் பயன்படுத்தப்பட்டது. ட்ரோன் தொழில்நுட்பத்தில் இந்தியா உலகின் மையமாக உருவெடுக்கும் என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் கூறியுள்ளார்.

சென்னை தனியார் கல்லூரியில் ட்ரோன் திறன் மற்றும் பயிற்சி மாநாடு மற்றும் ட்ரோன் உற்பத்தி மையத்தை இன்று(டிச.,06) மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் துவக்கி வைத்தார்.
இதையடுத்து அனுராக் தாகூர் பேசியவதாவது: உலகில் உள்ள பல பிரச்னைகளை தீர்வு காணும் வாய்ப்பு, இந்தியாவில் உள்ள இளைஞர்கள் கையில் உள்ளது.நாளுக்கு நாள் அறிவியல் வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே உள்ளது.

மேலும், ட்ரோன்கள் தற்போது வேளாண் துறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது, மிக பெரிய அளவில் அவை உதவியாக உள்ளதால் பிரதமர் அரசு திட்டங்களை அவற்றை சேர்த்துள்ளார். 2014ஆம் ஆண்டு ' மேக் இன் இந்தியா' திட்டம் குறித்து பிரதமர் பேசும்போது, இது சாத்தியமா என கேள்வி எழுப்பினார்கள். இன்று 2022ஆம் ஆண்டு இந்தியாவின் இளைஞர்கள் அவற்றை சாத்திய படுத்தி வருகின்றனர்.

அத்துடன், வேளாண்துறையில் தொடர்ச்சியாக அறிவியல் வளர்ச்சிகளைக் கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஹிமாச்சல்பிரதேசம் போன்ற மலை உள்ள பகுதிகளில் ட்ரோன் பயன்படுத்துவது மிகவும் உதவியாக உள்ளது.
இருப்பினும் ட்ரோன் மூலம் அதிவேகமாகக் காய்கறிகள் மற்றும் பழங்களை வெளியே கொண்டு செல்ல கண்டுபிடிப்புகள் வர வேண்டும். மேலும், விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக அதிகரிக்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கோவிட் சமயத்தில், தொலைதூரப் பகுதிகளில் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை எடுத்து ட்ரோன் பயன்படுத்தப்பட்டது. இந்திய கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படும் ட்ரோன், தொலைதூர பகுதிகளில் பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்கவும் பயன்படுத்தப்படுக்கின்றனர். ட்ரோன் தொழில்நுட்பத்தில் இந்தியா உலகின் மையமாக உருவெடுக்கும். இவ்வாறு அவர் பேசினார்.