2668 அடி உயர மலையில் ஜோதியாய் ஜொலிக்குது மகாதீபம்: திருவண்ணாமலையில் பக்தர்கள் பரவசம்

Updated : டிச 06, 2022 | Added : டிச 06, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மலை உச்சியில், மஹா தீபம் இன்று ஏற்றப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தீபத்தை தரிசனம் செய்தனர்.திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா, கடந்த 27ல் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. விழாவில் இன்று அதிகாலை, 4:00 மணிக்கு, கோவில் கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
Tiruvannamalai, Arunachaleswarar, Maha Deepam, திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர், அருணாசலேஸ்வரர் கோவில், மஹா தீபம், கார்த்திகை தீப திருவிழா, Arunachaleswarar Temple,  Karthikai Deepam Festival,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மலை உச்சியில், மஹா தீபம் இன்று ஏற்றப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தீபத்தை தரிசனம் செய்தனர்.


latest tamil news

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா, கடந்த 27ல் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. விழாவில் இன்று அதிகாலை, 4:00 மணிக்கு, கோவில் கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்பட்டது. இதை முன்னிட்டு, கோவில் கொடிமரம் எதிரிலுள்ள தீப தரிசன மண்டபத்தில், பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.


latest tamil news

Advertisement

மேலும், ஆண்டிற்கு ஒரு நிமிடம் மட்டுமே காட்சி அளிக்கும் அர்த்தநாரீஸ்வரர், ஆனந்த தாண்டவம் மற்றும் மஹா தீப தரிசனம், இதை மூன்றும் ஒ‍ரு சேர காண்பவர்களுக்கு, 21 தலைமுறைக்கு, முக்தி கிடைக்கும் என்பது, பக்தர்களின் நம்பிக்கை.இந்த அரிய காட்சியை காண, லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர்.


latest tamil news


latest tamil news


11 நாட்கள்

திருவண்ணாமலையில் இன்று ஏற்றப்பட்ட தீபம் 11 நாட்கள் எரியும். நாள் ஒன்றுக்கு 650 கிலோ நெய் பயன்படுத்தப்பட உள்ளது. தீபம் ஏற்றப்படும் கொப்பரை செம்பினால் செய்யப்பட்டதுபாதுகாப்பு

மஹாதீபத்திற்காக, 4,500 கிலோ ஆவின் நெய் மற்றும் 1,150 மீட்டர் காடா துணியால் செய்யப்பட்ட திரி மற்றும் மஹா தீபம் ஏற்றப்பட உள்ள, ஐந்தரை அடி உயர கொப்பரை, அண்ணாமலையார் மலை உச்சிக்கு நேற்று துாக்கி செல்லப்பட்டன. மஹாதீபத்தை முன்னிட்டு, அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் வந்ததால், பாதுகாப்பு கருதி, கோவில் வளாகத்திலுள்ள மடப்பள்ளியின் மேல் கூடாரம் அமைத்து, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.


latest tamil news

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (5)

தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா
06-டிச-202219:32:56 IST Report Abuse
தியாகு 2668 அடி உயர மலையில் ஜோதியாய் ஜொலிக்குது மகாதீபம்:...ஹி...ஹி...ஹி...2668 கோடிகள் ஊழல்கள் மூலம் ஆட்டையை போட்டு ஜோதியாய் ஜொலிக்கிறார் மருமகபிள்ளை. ஹி...ஹி...ஹி...
Rate this:
Cancel
EM.Ganesan - Nagapattinam,இந்தியா
06-டிச-202219:03:47 IST Report Abuse
EM.Ganesan SRI Annamalaiyarkku Arogaraa...
Rate this:
Cancel
Poochi Ram - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
06-டிச-202218:57:51 IST Report Abuse
Poochi Ram அது கோபுரம் உச்சி இல்லை... மலை உச்சி தீபம் ஏத்துறது😭😭😭😭😭 நேரடி ஒலிபரப்புனு வச்சினு இப்படி அசிங்க படுத்துறாங்களே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X