வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஐதராபாத் :புதுடில்லி மதுபான கொள்கையில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில் டிச.11-ம் தேதி கவிதா வீட்டிற்கு சென்று விசாரணை நடத்திட சி.பி.ஐ., கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டில்லியில் புதிய மதுபான கொள்கை தொடர்பாக, நடந்த பண பரிமாற்றத்தில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மகளும் எம்.எல்.சி.,யுமமான கவிதா, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்.பி., ஸ்ரீனிவாசலு ரெட்டி உள்ளிட்டோர் முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
![]()
|
இது குறித்து ஐதராபாத்தில் உள்ள என் வீட்டிலேயே விசாரணை நடத்தலாம் என அதிகாரிகளிடம் கடிதம் மூலம் தெரிவித்து விட்டேன். எந்தவிதமான கேள்விகளுக்கும் பதில் அளிக்க தயார் என குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து இன்று மீண்டும் சம்மன் அனுப்பிய சி.பி.ஐ., வரும் டிச.11-ம் தேதி கவிதா வீ்ட்டிலேயே விசாரணை நடத்திட முடிவு செய்துள்ளதாக கடிதம் மூலம் கவிதாவிற்கு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.