மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் நாளைமுதல் (டிச. 7) கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை:-
வங்கக்கடலில் மாண்டலர் புயல் உருவாகியுள்ள காரணத்தினால் 7-ஆம் தேதி முதல் மறுஅறிவிப்பு வரும் வரையில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த விசைபடகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்கவோ, கடலில் தங்கி மீன்பிடிக்கவோ வேண்டாம் எனவும், மேலும் தங்கள் படகுகளையும், உடமைகளையும் பத்திரமாக வைத்துகொள்ளுமாறு மயிலாடுதுறை மாவட்டமீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் ராஜேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர பாதுகாப்பு காவல் நிலைய போலீசார் தரங்கம்பாடி, சீர்காழி பூம்புகார் பழையார் உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.