காற்றுமாசுவில் இருந்து எரிபொருள்
உலகின் பல்வேறு பகுதிகள் காற்று மாசுவால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் காற்றுமாசுவில் இருந்து வாகனங்களுக்கு எரிபொருள், ஆடை என மறுசுழற்சி செய்யலாம் என அமெரிக்க ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. காற்றுமாசுவுக்கு காரணமாக இருக்கும் கார்பன் உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்களை மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் பொருட்களாக மாற்றுவதுதான் இதன் இலக்கு. இதன்படி இந்த காற்று மாசுவை முதலில் எத்தனாலாக மாற்றுகின்றனர். பின் எத்தனாலை வைத்து பிளாஸ்டிக் பாட்டில், தடகள உடை உள்ளிட்டவை தயாரிக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.
தகவல் சுரங்கம்
கொடி, விமான போக்குவரத்து தினம்
முப்படையினர், முன்னாள் வீரர்களின் நலனுக்கு நிதி திரட்டும் வகையில் டிச.,7ல் கொடி நாள் கடைபிடிக்கப்படுகிறது. மக்களிடமிருந்து பணம் பெற்று, வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பங்கள், காயமடைந்த வீரர்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.
* உலகில் சமூக, பொருளாதார வளர்ச்சியில் சர்வேதேச விமானப் போக்குவரத்தின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக டிச.,7ல் உலக விமான போக்குவரத்து தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'உலக விமான போக்குவரத்து வளர்ச்சிக்கு நவீன கண்டுபிடிப்பு' என்பது 2023 வரை இத்தினத்தின் மையக்கருத்து.