வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லக்கிம்பூர்: உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூரில் நான்கு விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்பட்ட வழக்கில், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உட்பட 13 பேர் மீது நீதிமன்றம் குற்றச்சாட்டை பதிவு செய்தது.உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, லக்கிம்பூர் என்ற இடத்தில், கடந்த ஆண்டு அக்டோபரில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
அப்போது, மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா வந்த கார், விவசாயிகளின் கூட்டத்திற்குள் புகுந்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
![]()
|
அப்போது நடந்த கலவரத்தில், கார் ஓட்டுனர், இரு பா.ஜ., தொண்டர்கள் மற்றும் ஒருபத்திரிகையாளர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில், அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ரா முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். மேலும், 13 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதில், ஆஷிஷ் மிஸ்ரா உட்பட 13 பேர் சிறையில் உள்ளனர். 14வது குற்றவாளியான வீரேந்திர சுக்லா என்பவர், 'ஜாமினில்' உள்ளார்.
இந்நிலையில், ஆஷிஷ் மிஸ்ரா உட்பட 13 குற்றவாளிகள் மீது லக்கிம்பூர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. சட்டத்துக்கு புறப்பாக கூடுதல், கொலை, கொலை முயற்சி, ஆபத்தான ஆயுதங்களால் கடுமையான காயங்களை ஏற்படுத்துவது, சதி திட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
''இந்த வழக்கு விசாரணை வரும் 16ல் இருந்து துவங்கும்,'' என, கூடுதல் மாவட்ட நீதிபதி சுனில் குமார் வர்மா உத்தரவிட்டார்.