திருப்பத்துார்:திருப்பத்துார் அருகே, காரில் கடத்த முயன்ற 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செம்மக்கட்டைகளை போலீசார் பறிமுதல் யெ்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே தமிழக- ஆந்திரா மாநில எல்லையான பச்சூரில், போலீசார் நேற்று ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திரா மாநிலத்திலிருந்து வந்த காரை மடக்கினர். அதில் இருந்தவர்கள் காரை நிறுத்தி விட்டு தப்பியோடினர். சோதனையில் காரில் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஐந்து செம்மரக்கட்டைகள் இருந்தது.
விசாரணையில், ஆந்திரா மாநிலம், திருப்பதியிலிருந்து நாட்றம்பள்ளி வழியாக சென்னைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. நாட்றம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.