போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் 5 வயது சிறுவனர் ஆள்துளை கிணற்றில் விழுந்த சம்பவம் நடந்துள்ளது. சிறுவனை மீட்க மீட்புபடையினர் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
மத்திய பிரதேச மாநிலம் பீட்டல் மாவட்டம் மாண்டாவி என்ற கிராமத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன், அங்கு விளையாடி கொண்டிருந்த போது சரியாக மூடப்படாத ஆள் துளை கிணற்றில் தவறி விழுந்தான். தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சிறுவனை மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். சிறுவன் சுமார் 55 அடி ஆழத்தில் சிக்கியுள்ளதால், தேசிய பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டனர்.