தென் கொரிய நாடகம் பார்த்த இரு சிறுவர்களுக்கு வடகொரியாவில் மரண தண்டனை நிறைவேற்றம்

Updated : டிச 13, 2022 | Added : டிச 06, 2022 | கருத்துகள் (35) | |
Advertisement
சியோல்: தென் கொரிய , நாடகம் பார்த்ததாக இரு சிறுவர்களுக்கு வடகொரியா ராணுவம் மரண தண்டனை நிறைவேற்றியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.வட கொரிய அதிபர் கிம் ஜங் உன் கடந்த ஆண்டு கடுமையான சட்டத்தை கொண்டு வந்தார். அதில் தென் கொரிய திரைப்படங்கள், நாடகங்கள், இசை ஆகியவற்றின் 'வீடியோ, சிடி'க்களை விற்பனை செய்தது அல்லது அப்படங்களை பார்த்த குற்றங்களுக்கு பொதுமக்கள்
வடகொரியா, இரு சிறுவர்கள் , மரண தண்டனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சியோல்: தென் கொரிய , நாடகம் பார்த்ததாக இரு சிறுவர்களுக்கு வடகொரியா ராணுவம் மரண தண்டனை நிறைவேற்றியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


வட கொரிய அதிபர் கிம் ஜங் உன் கடந்த ஆண்டு கடுமையான சட்டத்தை கொண்டு வந்தார். அதில் தென் கொரிய திரைப்படங்கள், நாடகங்கள், இசை ஆகியவற்றின் 'வீடியோ, சிடி'க்களை விற்பனை செய்தது அல்லது அப்படங்களை பார்த்த குற்றங்களுக்கு பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


இந்நிலையில் வடகெரியாவைச் சேர்ந்த 16 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் தென்கொரியா டி.வி. நாடகம் பார்த்ததாக கடந்த அக்டோபர் மாதம் அந்நாட்டு ராணுவத்திடம் சிக்கினர். இவர்கள் மீது விசாரணை நடைபெற்று வந்த நிலையில் குற்றச்சாட்டு நிருபனமானது.இதையடுத்து ரியாங்க்காங் மாகாணத்தில் வைத்து பொதுமக்கள் மத்தியில் இரு சிறுவர்களும் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டனர். வட கொரியாவின் இச்செயலுக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கண்டித்து உள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (35)

வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
11-டிச-202206:57:25 IST Report Abuse
வாய்மையே வெல்லும் இந்தியாவில் குக்கர் பாம் வைப்பான் ஒரு மக்களின் வாழ்வாதார துரோகி ..அவனுக்கு பரிந்து பேச விளக்கு பிடிக்க ஆயிரம் அல்லக்கைகள்..செருப்பால அடிக்கணும் இந்த மாதிரி ஆட்களை ஆதரிப்பவர்களை .. மனித இனத்துக்கே இவர்களால் கேடு
Rate this:
Cancel
07-டிச-202212:09:25 IST Report Abuse
எஸ் எஸ் பாரதம் எவ்வளவு சொர்க்கம் என்பதை இப்போதாவது திராவிட கம்யூனிஸ்ட் காங் அறிவு ஜீவிகள் உணர வேண்டும்
Rate this:
Cancel
Milirvan - AKL,நியூ சிலாந்து
07-டிச-202200:50:46 IST Report Abuse
Milirvan சீன செல்ல பிள்ளை வேற எப்படி இருக்க முடியும்? சீனாவில் ஏகாதிபத்தியம் முடிவுக்கு வந்தால் உலகின் பாதி பிரச்சனைகள் தீர்ந்து விடும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X