மும்பை: கர்நாடகா -மஹாராஷ்டிரா எல்லை பிரச்னையில் அனைத்து கட்சிகளின் ஒருமித்த கருத்தை ஏற்று முடிவு எடுக்க வேண்டும் என முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவிற்கு சரத்பவார் வலியுறுத்தியுள்ளார்.
கர்நாடகா - மஹாராஷ்டிரா எல்லையில் உள்ள பெலகாவி யாருக்கு சொந்தம் என்ற பிரச்னை, விஸ்வரூபம் எடுத்துள்ளது. பெலகாவி மற்றும் மஹாராஷ்டிராவின் சில பகுதிகளில் பஸ், லாரி, கார் உடைப்பு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
![]()
|
இதனால், எல்லைப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.இந்த விவகாரம் குறித்து தேசிய வாத காங். மூத்த தலைவர் சரத்பவார் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இரு மாநில எல்லை பிரச்னையில் முடிவு எடுக்கும் முன்பாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அனைத்து கட்சிகளின் ஒரு மித்த கருத்தை ஏற்க வேண்டும் என்றார்.
பொம்மைக்கு பட்னவிஸ் கண்டனம்
பெலகாவியின் ஹிரேபாகேவாடியில், மஹாராஷ்டிரா லாரிகள் மீது கற்கள் வீசிய சம்பவம் குறித்து, அம்மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையை தொலைபேசி வாயிலாக பேசி கண்டனம் தெரிவித்தார். வாகனங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்படியும், சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் அவர் கோரிக்கை விடுத்தார். பதிலுக்கு, பொம்மையும் தங்கள் மாநில வாகனங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்படி கோரிக்கை விடுத்தார்.