காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மிலிட்டரி சாலையில் நடக்கும் விரிவாக்கப்பணியில் மூன்று இடங்களில் சிறு பாலங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது.
கல்பாக்கம் -- திருத்தணி வரை நெடுஞ்சாலை விரிவாக்கப்பணி நடந்து வருகிறது. தற்போது காஞ்சிபுரம் நகர் பகுதியான பெரியார் நகர் பகுதியில் இருந்து துவங்கி மிலிட்டரி சாலை செவிலிமேடு பகுதி வரை நடந்து வருகிறது.
வாகனங்கள் செல்வதற்கு இடையூறு இல்லாமல் அதற்கான வழி ஏற்படுத்தியுள்ளனர். இந்த சாலையின் குறுக்கே மழைநீர் வரத்து கால்வாய்கள் உள்ள பகுதிகளில் சிறு பாலங்கள் அமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது.
அதே போல் இந்த பணி ஒலிமுகமது பேட்டையில் இருந்து வெள்ளகேட் வரையும் நடக்கிறது. இந்த நான்கு வழிசாலை பணி நிறைவு பெற இன்னும் ஓராண்டுக்கு மேல் ஆகும் என நெடுஞ்சாலை துறையினர் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே செங்கல்பட்டு - வாலாஜாபாத் வரை பணி இன்னும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் பகுதி பகுதி யாக நடக்கிறது. இதில் தரைப்பாலங்கள் மற்றும் சிறுபாலங்கள் பணி மற்றும் சாலை இரு புறங்களி லும் மழை நீர் செல்வதற்கு வசதியாக கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
பணி முழுமையாக நிறைவு பெற்றால் தேசிய நெடுஞ்சாலை போல் காணப்படும். எதிர்காலத்தில் போக்குவரத்துக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என நெடுஞ்சாலைதுறையினர் தெரிவித்துள்ளனர்.