மப்பேடு, பண்ணுார் அடுத்த, புள்ளலுார் கிராமத்திலிருந்து சவுடு மணல் அள்ளப்பட்டு லாரிகள் வாயிலாக சென்னை உட்பட பல பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இவ்வாறு கொண்டு செல்லப்படும் சவுடு மண், தார்ப்பாய் போடால் செல்வதால் அவ்வழியே வாகனங்களில் செல்வோர் சிரமப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் செல்வோர் அவதிப்பட்டு வருகின்றனர். காவல் துறையினரும் தார்ப்பாய் போடாமல் செல்லும் லாரிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம், தார்ப்பாய் போடாமல் செல்லும் சவுடு மண் லாரிகள் மீது, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஒட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.