குந்தி ஜார்க்கண்டில் நிலத்தகராறு காரணமாக இளைஞர் ஒருவர் உறவினரின் தலையை வெட்ட, துண்டித்த தலையுடன் இளைஞரின் நண்பர்கள் 'செல்பி' எடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்டின் குந்தி மாவட்டத்தில் உள்ள முர்ஹு கிராமத்தில் வசித்தவர் கனு முண்டா, 24.
இவருக்கும், இவரது உறவினர் சாகர் முண்டாவுக்கும், 20, இடையே நிலத்தகராறு இருந்தது. இந்நிலையில், சமீபத்தில் தன் நண்பர்களுடன் கனு வீட்டுக்கு வந்த சாகர், அவரை கடத்திச் சென்றார்.
அருகிலிருந்த வனப்பகுதியில் வைத்து, கனுவின் தலையை சாகர் அரிவாளால் வெட்டி துண்டித்தார்.
பின், சாகரின் நண்பர்கள், துண்டித்த தலையுடன் மொபைல் போனில் 'செல்பி' எடுத்துக் கொண்டனர்.
இதையடுத்து உடலையும், தலையையும் வெவ்வேறு இடத்தில் வீசி விட்டு தப்பினர்.
கனு முண்டாவின் தந்தை கொடுத்த புகார்படி வழக்குப் பதிவு செய்த போலீசார், கனுவின் உடல் மற்றும் தலையை வனப்பகுதியில் நேற்று கண்டுபிடித்தனர்.
கொலையாளி சாகர், அவரது மனைவி உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஐந்து மொபைல் போன்கள், அரிவாள் மற்றும் ஒரு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.