புதுடில்லி, :'பசியுடன் யாரும் உறங்க செல்லக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமையாகும்' என, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யக் கோரும் வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் மற்றும் ஊரடங்கு காலத்தின்போது, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தானாக வழக்காக பதிவு செய்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, ஹீமா கோஹ்லி அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
![]()
|
பசியுடன் யாரும் உறங்கக் கூடாது என்பதை உறுதி செய்வது நம்முடைய பாரம்பரியமாகும். நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உணவுப் பொருள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது மத்திய அரசின் கடமையாகும்.
இந்த விஷயத்தில் மத்திய அரசு சிறப்பான பணிகளை செய்து வருகிறது. இதில் குறைகூற விரும்பவில்லை. அதே நேரத்தில் இந்த நல்ல பணி தொடர வேண்டும் என்று விரும்புகிறோம்.
இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
வழக்கின் விசாரணை நாளை தொடர்ந்து நடக்கிறது.