நிலங்களை அளவீடு செய்ய வந்த அதிகாரிகள்; ஊருக்குள் நுழைய விடாமல் மக்கள் முற்றுகை

Added : டிச 07, 2022 | |
Advertisement
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த கரிவெட்டி கிராமத்தில், என்.எல்.சி., சுரங்க விரிவாக்கத்திற்காக நிலங்களை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை, கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே கரிவெட்டி, கத்தாழை, மும்முடிசோழகன், வி.சாத்தப்பாடி, ஊ.ஆதனுார், வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களை கையகப்படுத்தி, சுரங்கத்தை
 நிலங்களை அளவீடு செய்ய வந்த அதிகாரிகள்; ஊருக்குள் நுழைய விடாமல் மக்கள் முற்றுகை



சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த கரிவெட்டி கிராமத்தில், என்.எல்.சி., சுரங்க விரிவாக்கத்திற்காக நிலங்களை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை, கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே கரிவெட்டி, கத்தாழை, மும்முடிசோழகன், வி.சாத்தப்பாடி, ஊ.ஆதனுார், வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களை கையகப்படுத்தி, சுரங்கத்தை விரிவாக்கம் செய்வதற்கான முயற்சியில் என்.எல்.சி., இந்தியா நிறுவன அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று மதியம், 12:00 மணிக்கு, நிலங்களை அளவீடு செய்ய என்.எல்.சி., நிறுவன அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகளுடன் வருவதாக தகவல் பரவியது.

இதையடுத்து, கரிவெட்டி கிராம மக்கள், நில எடுப்பு தடுப்பு சங்கத்தினர் உள்ளிட்ட, 500க்கும் மேற்பட்டோர் கிராம எல்லையில் திரண்டு சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

அவர்களுக்கு ஆதரவாக பா.ம.க., - அ.தி.மு.க., - கம்யூ., உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் போராட்டம் செய்தனர்.

மதியம், 12:10 மணிக்கு போலீஸ் பாதுகாப்புடன் வந்த மாவட்ட வருவாய் அதிகாரி பூவராகன், நில எடுப்பு மாவட்ட வருவாய் அதிகாரி கிருஷ்ணன் ஆகியோர், மக்களின் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் கிராமத்திற்குள் செல்ல முயன்றனர்.

அவர்களை முற்றுகையிட்டு தடுத்து நிறுத்திய கிராம மக்கள், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அளவீடு செய்ய வந்த அதிகாரிகள், 2 மணி நேரம் வரை ஊர் எல்லையிலேயே காத்திருந்து, வேறு வழியின்றி, 2:00 மணிக்கு திரும்பினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X