மூணாறு : கேரள மாநிலம் மூணாறைச் சுற்றியுள்ள தேசிய பூங்காக்களில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகக்குழுவினர் ஆய்வு செய்தனர்.
இந்த அமைச்சகத்தின் கீழ் உள்ள முதன்மை வனத்துறை கன்சர்வேட்டர் குமார், வன உயிரின பாதுகாப்பு அதிகாரி ஹரிந்தரன்கோபாலா, நிபுணர்கள் ஜோதிகேஷித், ஜான்சன் ஆகியோர் கொண்ட குழு மூணாறு பகுதியில் உள்ள மதிகெட்டான் சோலை, பாம்பாடும் சோலை, இரவிகுளம் ஆகிய தேசிய பூங்காக்களில் 2 நாட்களாக ஆய்வு நடத்தியது. தேசிய பூங்காவின் பாதுகாப்பு, வனவிலங்கு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, செயல்பாடு, வளர்ச்சி பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.
அக்குழுவினர் வனத்துறையினர் வழங்கிய ஆவணங்களை நேற்று மூணாறு வனஉயிரின பாதுகாவலர் அலுவலகத்தில் வைத்து ஆய்வு செய்தனர். நாளை புறப்படும் குழு அதன் அறிக்கையை அமைச்சகத்திடம் தாக்கல் செய்து அதன்பின் மேல்நடவடிக்கை எடுக்கப்படும்.