திருநெல்வேலி: களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில், 17 வயது பிளஸ் 2 மாணவரை, கத்தியால் குத்திய சக மாணவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 தொழிற்பயிற்சி பிரிவு மாணவர்களில் ஒருவரது புத்தகம் காணாமல் போனது. இதனால், இரு மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று கத்தியுடன் வந்த ஒரு மாணவர், காலை 11:30 மணி இடைவேளையின் போது, சக மாணவரை, முதுகில் கத்தியால் குத்தினார்.
இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து வழக்குப் பதிந்த களக்காடு போலீசார், கத்தியால் குத்திய மாணவரை கைது செய்தனர்.