கருமத்தம்பட்டி : கருமத்தம்பட்டி அருகே பைக் மீது கார் மோதியதில் இரு வாலிபர்கள் உயிரிழந்தனர்.
கோவை மாவட்டம், மோப்பிரிபாளையம் பேரூராட்சி, சோளக்காட்டுபாளையத்தைச் சேர்ந்த கதிரேசன் மகன் சோமசுந்தரம், 23; பஞ்சாலை தொழிலாளர். அருகில் உள்ள அம்மன் நகரைச் சேர்ந்த மணிவேல் மகன் விக்னேஷ், 22; பட்டப்படிப்பு முடித்துள்ளார்.
நண்பர்களான இருவரும் நேற்று முன்தினம் இரவு, 9:30 மணிக்கு, சோமனுாரில் உள்ள தியேட்டரில் சினிமா பார்த்துவிட்டு, பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அவிநாசி ரோட்டில், கணியூர் மேம்பாலத்தின் மேல் சென்றபோது கோவை நோக்கி சென்ற கார் மோதியதில், விக்னேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த சோமசுந்தரம், மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த கவுதம் மீது வழக்குப்பதிவு செய்து கருமத்தம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.