சிவகங்கை: சிவகங்கை அருகே வி. புதுப்பட்டியைச் சேர்ந்த சிவானந்தம் மகன் குணா 4. இவர் நேற்று மாலை 4:00 மணிக்கு பால்வாடி அருகே உள்ள சேது ஊரணியில் சக நண்பர்களுடன் குளிக்கச் சென்றார்.
நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கினார். இதை அறிந்த கிராமத்தினர் அவரை மீட்க முயன்றனர். குணாவை மீட்க சென்ற வீ. புதுப்பட்டி ஆறுமுகம் மகன் அய்யங்காளை 22யும் நீரில் மூழ்கி பலியானார்.
இருவரது உடலையும் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர். இன்ஸ்பெக்டர் ரமேஷ் விசாரிக்கிறார்.