குன்னுார்: குன்னுார் - மேட்டுப்பாளையம் பாதையில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்ட நிலையில், அப்பகுதியில் அந்தரத்தில் நிற்கும் பாறைகள் விரைவில் அகற்றப்படஉள்ளன.
நீலகிரி மாவட்டம், குன்னுாரில் இரவு நேரத்தில் மழை பெய்கிறது. நேற்று முன்தினம் மதியம் குன்னுார் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்த போது, மரப்பாலம் அருகே ராட்சத பாறைகளுடன், மண் சரிவும் ஏற்பட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நேற்று காலை அப்பகுதியில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டது. சாலை விரிவாக்கம் செய்யப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை. இப்பகுதியில் அந்தரத்தில் பாறைகள் உள்ளதால் கன மழை சமயத்தில், பெரியளவில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.