ஆசிரியர்கள் நியமன முறையை மறுஆய்வு செய்ய கல்வித்துறை செயலர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு

Added : டிச 07, 2022 | |
Advertisement
சென்னை : பள்ளி, கல்லுாரிகளில், ஆசிரியர் நியமன முறையில் மறுஆய்வு மேற்கொள்ள, கல்வித் துறை முதன்மைச் செயலர்களுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பஞ்சாயத்து ஒன்றிய பள்ளியில், இடைநிலை ஆசிரியையாக பணியாற்றும் நித்யா என்பவர், தமிழில் பி.எட்., பட்டம் பெற்றார். அதன் பின், ஆங்கிலத்தில் பி.ஏ., பட்டப் படிப்பு முடித்தார். இவர், ஆங்கிலப்

சென்னை : பள்ளி, கல்லுாரிகளில், ஆசிரியர் நியமன முறையில் மறுஆய்வு மேற்கொள்ள, கல்வித் துறை முதன்மைச் செயலர்களுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பஞ்சாயத்து ஒன்றிய பள்ளியில், இடைநிலை ஆசிரியையாக பணியாற்றும் நித்யா என்பவர், தமிழில் பி.எட்., பட்டம் பெற்றார்.

அதன் பின், ஆங்கிலத்தில் பி.ஏ., பட்டப் படிப்பு முடித்தார்.

இவர், ஆங்கிலப் பிரிவில் பட்டதாரி ஆசிரியையாக பதவி உயர்வு வழங்க கோரியதை, மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி நிராகரித்தார்.

இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், நித்யா வழக்கு தொடர்ந்தார். தனக்கு, ஆங்கில பிரிவில் பட்டதாரி ஆசிரியையாக பதவி உயர்வு வழங்க, கல்வித் துறைக்கு உத்தரவிடக் கோரியிருந்தார்.

இம்மனு, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் முனுசாமி ஆஜரானார்.

கல்வித்துறை சார்பில், சிறப்பு பிளீடர் மைத்ரேயி சந்துரு ஆஜராகி, ''தமிழில் பி.எட்., பட்டம் பெற்றபின், ஆங்கிலத்தில் பி.ஏ., படித்துள்ளார்.

''முதலில், ஆங்கிலத்தில் பி.ஏ., படித்து, பின், ஆங்கிலத்தில் பி.எட்., பட்டம் பெற்றவர்கள் மட்டுமே, ஆங்கிலத்தில் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற தகுதி உள்ளது,'' என்றார்.

மனுவை விசாரித்த, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு:

தரமான கல்வி பெறும் உரிமை, குழந்தைகளுக்கு உள்ளது. அதை வழங்க வேண்டியது, மாநில அரசின் கடமை. தகுதியான, அர்ப்பணிப்பு உடைய ஆசிரியர்களை நியமித்தால் தான், தரமான கல்வியை உறுதி செய்ய முடியும்.

அரசு நியமனங்களில் இடஒதுக்கீடு வழங்கினாலும் கூட, தகுதியை நீர்த்து போக செய்ய முடியாது.

வகுப்புக்கே செல்லாதவர்கள், வகுப்பறை அனுபவம் இல்லாதவர்கள், பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில் நன்றாக பாடம் எடுப்பர் எனக் கூற முடியாது.

ஆனால், பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்லாதவர்கள் கூட, தற்போது ஆசிரியர் பணியிடங்களில் பணியாற்றும் துரதிருஷ்டவசமான சூழல் உள்ளது. தொலைதுார கல்வி வாயிலாக படித்தவர்கள், ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் அல்ல.

இந்தியாவில், தரமான கல்வி வழங்குவதில், 27வது மாநிலமாக தமிழகம் உள்ளதாக, ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது. தமிழகத்தை விட, 26 மாநிலங்கள் முன்னணியில் உள்ளன.

இந்தக் கல்வியாண்டில் கூட, 36 ஆயிரத்து 895 கோடி ரூபாய், கல்விக்காக அரசு ஒதுக்கி உள்ளது. இதில், பெரும்பாலான தொகை, ஆசிரியர்களுக்கு சம்பளமாகச் செல்கிறது.

தொடக்க கல்வி இயக்குனர் தாக்கல் செய்த அறிக்கையில், கல்வித் தரத்தை மேம்படுத்த, கல்வி நிலையங்களுக்குச் சென்று, கல்வி தகுதி பெற்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க, நடவடிக்கை எடுப்பதாக, அரசு கொள்கை அளவில் ஒப்புக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.

பள்ளி, கல்லுாரிகளில் தரமான கல்வி வழங்குவதை உறுதி செய்ய, ஆசிரியர்கள் நியமன முறையை மறுஆய்வு செய்வதாக, அரசும் உறுதி அளித்துள்ளது.

எனவே, மூன்று மாதங்களுக்குள், கல்வித்துறையில் ஆசிரியர்கள் நியமன முறையை மறுஆய்வு செய்ய, பள்ளி கல்வி மற்றும் உயர் கல்வித் துறை முதன்மை செயலர்களுக்கு உத்தரவிடப்படுகிறது.

இந்த வழக்கை பொறுத்தவரை, தமிழில் பட்டதாரி ஆசிரியராக நியமிக்க, மனுதாரர் பொருத்தமாக இருக்கலாம் என்பதால், உரிய நடைமுறையை பின்பற்றி அவரை பரிசீலிக்கலாம்.

இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X