சென்னை : கோவை, கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே, அக்., 23ல், ஐ.எஸ்., பயங்கரவாதி ஜமேஷா முபின், 29, கார் குண்டு வெடிப்பை நடத்தி பலியானார்.
இது தொடர்பாக, தேசிய புலனாய்வு முகமையான, என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரித்து, ஜமேஷா முபின் கூட்டாளிகள், உக்கடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த அசாருதீன், 23, அப்சர் கான், 28, முகமது தல்கா, 25, முகமது ரியாஸ், 27, பெரோஸ் இஸ்மாயில், 26, முகமது நவாஸ் இஸ்மாயில், 27 ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள், சென்னை பூந்தமல்லியில் உள்ள, என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை நேற்று போலீசார், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆஜர்படுத்தினர். ஆறு பேருக்கும், வரும் 13ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து, நீதிபதி இளங்கோவன் உத்தரவிட்டார்.