சங்கராபுரம் : சங்கராபுரத்தை சேர்ந்த ஆசிரியர் தண்டபாணிக்கு இயக்க செம்மல் விருதை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி வழங்கினார்.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் உலக தமிழாசிரியர்கள் மாநாடு சென்னையில் கடந்த 3ம் தேதி நடந்தது.
இதில் சங்கராபுரத்தை சேர்ந்த முன்னாள் மாவட்ட செயலாளர் தண்டபாணிக்கு இயக்க செம்மல் விருதை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி வழங்கினார்.
மாநில பொது செயலாளர் ரங்கராஜன், மாநில தலைவர் லட்சுமிநாராயணன், மாநில பொருளாளர் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.