முன்கூட்டியே பூத்த செவ்வந்தி
உடுப்பி:
உடுப்பி மாவட்டம், ஹெம்மடி, எச். பேலுர், ஹரேகோடு, ராஜாடி ஆகிய பகுதிகளில் செவ்வந்தி பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. வழக்கமாக செப்டம்பர் மாதம் செவ்வந்தி விதைக்கப்படும். இது ஜனவரி முதல் பலன் கொடுக்கும். திருவிழா, சுபகாரியங்களுக்கு பயன்படுத்தப்படும்.
ஆனால், இந்த முறை தொடர் மழை, குளிர் போன்ற வானிலை மாற்றத்தால் மூன்று வாரத்துக்கு முன்கூட்டியே செவ்வந்தி பூக்கள் பூக்க துவங்கி விட்டன. கடந்த இரண்டு ஆண்டாக கொரோனாவால் பூக்கள் கேட்பாரின்றி இருந்தது. இந்த முறை எந்த கட்டுப்பாடும் இல்லாததால், அதிக எண்ணிக்கையில் விவசாயிகள் பூக்களை சாகுபடி செய்துள்ளனர்.
தற்போது மேகம் சூழ்ந்த வானிலை நிலவுகிறது. மழை பெய்யும் சூழ்நிலை உள்ளது. எனவே இனி தொடர் மழை பெய்தால் செவ்வந்தி பூ சாகுபடி பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
**
சாலையில் திரியும் மாடுகள்
பாதசாரிகளை முட்டுவதால் பீதி
ஷிவமொகா:
ஷிவமொகா தீர்த்தஹள்ளி நகரில் நேற்று முன்தினம், ஒருவர் சாலையோரம் குடையை பிடித்தபடி நின்றிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த காளை மாடு ஒன்று, அவரை பலமாக முட்டி தள்ளியது.
உடனடியாக, அங்கிருந்தவர்கள் மாட்டை விரட்டி விட்டு முதியவரை மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவிலும் பதிவாகி உள்ளது. தீர்த்தஹள்ளியில் வீதி மாடுகள் அதிகமாக உள்ளன.
இவை, சாலைகளில் நடமாடுவோர் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு தொந்தரவை கொடுப்பதால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, 'மாடுகளை ரோட்டில் நடமாட விடாதவாறு, அதன் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும்' என வாகன ஓட்டிகள் கூறி உள்ளனர்.
**
படம்: mandya = இளைஞர்களுடன் கபடி விளையாடிய எம்.எல்.ஏ., இடம்: ஜக்கனஹள்ளி, மாண்டியா.
கபடி ஆடிய எம்.எல்.ஏ.,
மாண்டியா:
மாண்டியா பாண்டவபுரா அருகே உள்ள ஜக்கனஹள்ளியில், கிராம பஞ்சாயத்து சார்பில் நேற்று கிராமிய விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதை மேலுகோட்டே ம.ஜ.த., - எம்.எல்.எல்.ஏ., புட்டராஜு துவக்கி வைத்தார். அப்போது அவர் இளைஞர்களுடன் சிறிது நேரம் கபடி ஆடினார். இதை பார்த்த பார்வையாளர்கள் கைதட்டி, விசில் அடித்து ஆரவாரம் செய்தனர். இதை, அவரது ஆதரவாளர்கள் சமூக வலைளத்தில் பதிவிட்டுள்ளனர்.
**
பண்டிப்பூரில் வனவிலங்கு பகுதி
இரண்டாக பிரிக்க திட்டம்
சாம்ராஜ் நகர்:
சாம்ராஜ் நகர் பண்டிப்பூரில் வனவிலங்குகளை பார்வையிட தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வருகின்றனர். இவர்கள், வனவிலங்குகளை பார்வையிட வாகன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு வாகனங்களில் செல்லும் போது எல்லோருக்கும் வனவிலங்குகள் காண கிடைக்காது. ஒரு வாகனத்தில் செல்வோருக்கு புலி, யானை கூட்டம் போன்ற வனவிலங்குகள் தென்பட்டால், அதன் டிரைவர் மற்ற வாகனத்தில் இருப்போருக்கு மொபைல் போனில் தகவல் தெரிவிப்பார்.
உடனே மற்ற வாகனங்கள் அங்கு செல்லும். இதனால், குறுகலான சாலையில் ஒரே நேரத்தில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் கடந்து செல்ல வேண்டி உள்ளது.
மேலும் வேகமாக செல்ல வேண்டும் என்ற நோக்கில் பள்ளம், மேடு பகுதியில் டிரைவர்கள் வாகனங்களை ஓட்டுவதால் சுற்றுலா பயணியருக்கு தொந்தரவு ஏற்டுகிறது. இது குறித்து சுற்றுலா பயணியர் புகார் கூறியதை அடுத்து, பண்டிப்பூரில் வனவிலங்குகள் பார்வையிடும் பகுதியை 'ஏ' மற்றும் 'பி' என பிரிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஒரு பகுதியில் இருக்கும் வாகனம் மற்ற பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட உள்ளது. விரைவில் இதை அதிகாரிகள் அமல்படுத்த உள்ளனர்.
**
மின் கட்டணம் கட்ட முடியாத கிராம பஞ்சாயத்து
ஹாசன்:
ஹாசன் மாவட்டம், ஷ்ரவணபெலகோளா பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள பிரமாண்ட கோமதீஸ்வரரை காண, தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வருகின்றனர். இதனால் அவர்களுக்கு தேவையான குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்த ஷ்வரணபெலகோளா கிராம பஞ்சாயத்து மாதம்தோறும் பல லட்சம் ரூபாய் செலவிடுகிறது. சுற்றுலா பயணியருக்கு தேவையான குடிநீர் ஹேமாவதி அணையில் இருந்து கொண்டு வரப்படுகிறது.
இதற்காக, பெரிய அளவிலான இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் ஷ்வரவணபெலகோளா கிராம பஞ்சாயத்துக்கு மாதம் 4 லட்சம் ரூபாய் வரை மின்சார பில் வருகிறது. ஆனால் கிராம பஞ்சாயத்துக்கு குறைவாக வருவாய் வரும் காரணத்தால் முழு கட்டணத்தை கட்ட முடியாமல் மாதம், 2 லட்சம் ரூபாய் மட்டுமே மின் கட்டணம் செலுத்துகிறது.
இதன் மூலம் எட்டு ஆண்டுகளில், 3 கோடி ரூபாய் வரை மின் கட்டணம் பாக்கி உள்ளது. ஹெஸ்காம் நிறுவத்தினரும் மின் பாக்கியை கட்டுமாறு பல முறை நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
எனவே, 'கிராம பஞ்சாயத்து பாக்கி மின் கட்டணத்தை செலுத்த, மாநில அரசு கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும்' என கோவில் கமிட்டியினர் மற்றும் ஷ்ரவணபெலகோளா தொகுதி ம.ஜ.த., - எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
**
மருந்தாளுனர் பற்றாக்குறை
நோயாளிகள் அவதி
சித்ரதுர்கா:
சித்ரதுர்கா செல்லகரே தாலுகா மருத்துவமனை சுமார் 1,000 படுக்கைகள் வசதி கொண்டது. நாள்தோறும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இங்கு நோயாளிகளுக்கு மருந்துகளை வினியோகிக்கும் மருந்தாளுனர்கள் பற்றாக்குறை நிலவுகிறது.
மருத்துவமனையின் 'டி குரூப்' ஊழியர்களே மருந்து சீட்டுகளை வாங்கி, நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகளை வழங்குகின்றனர். இதனால் அதிர்ச்சி அடையும் நோயாளிகள் மருந்து, மாத்திரைகளை வாங்குவதா அல்லது வேண்டாமா என யோசிக்கின்றனர். மேலும் சிலர் வெளியில் இருந்து மருந்து, மாத்திரைகளை வாங்கி வருகின்றனர். 'சுகாதார துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்து, போதுமான மருந்தாளுனர்களை நியமிக்க வேண்டும்' என நோயாளிகள் கூறி உள்ளனர்.
**
பி.ஜி.,க்களுக்கு புதிய கட்டுப்பாடுதட்சிண கன்னடா:
தட்சிண கன்னடா, மங்களூரில் கடந்த 19ம் தேதி ஷாரிக் என்பவர் குக்கர் குண்டை கொண்டு போகும்போது வெடித்தது. இவர் மைசூரில் போலி ஆதார் கார்டை கொடுத்து அறை எடுத்து தங்கி இருந்தார். இதையடுத்து, கர்நாடகா முழுதும் வாடகை வீடுகளுக்கு போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
அதுபோல மங்களூரில், இனி புதிதாக பி.ஜி.,க்கள் துவங்குவோர் உள்ளூர் மாநகராட்சி அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். போலீசாரிடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். இங்கு தங்க வருபவர்களின் ஆவணங்களை முழுமையாக சரிபார்த்து அறை தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதோடு, மங்களூரில் 600க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளில் போலீசார் சோதனை நடத்த உள்ளனர். அப்போது, 'விடுதியில் போதை பொருள் உபயோகம், ஆவணம் இன்றி யாராவது தங்கி இருப்பது தெரியவந்தாலோ அல்லது லைசென்ஸ் இல்லாதது தெரியவந்தாலோ, உரிய விளக்கம் அளிக்க வேண்டும். இல்லை என்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்**
சாலையில் திரியும் மாடுகள்
பாதசாரிகளை முட்டுவதால் பீதி
ஷிவமொகா: ஷிவமொகா தீர்த்தஹள்ளி நகரில் நேற்று முன்தினம், ஒருவர் சாலையோரம் குடையை பிடித்தபடி நின்றிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த காளை மாடு ஒன்று, அவரை பலமாக முட்டி தள்ளியது.
உடனடியாக, அங்கிருந்தவர்கள் மாட்டை விரட்டி விட்டு முதியவரை மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவிலும் பதிவாகி உள்ளது. தீர்த்தஹள்ளியில் வீதி மாடுகள் அதிகமாக உள்ளன.
இவை, சாலைகளில் நடமாடுவோர் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு தொந்தரவை கொடுப்பதால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, 'மாடுகளை ரோட்டில் நடமாட விடாதவாறு, அதன் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும்' என வாகன ஓட்டிகள் கூறி உள்ளனர்.
பண்டிப்பூர் வனவிலங்கு பகுதி
இரண்டாக பிரிக்க திட்டம்
சாம்ராஜ் நகர்: சாம்ராஜ் நகர் பண்டிப்பூரில் வனவிலங்குகளை பார்வையிட தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வருகின்றனர். இவர்கள், வனவிலங்குகளை பார்வையிட வாகன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு வாகனங்களில் செல்லும் போது எல்லோருக்கும் வனவிலங்குகள் காண கிடைக்காது. ஒரு வாகனத்தில் செல்வோருக்கு புலி, யானை கூட்டம் போன்ற வனவிலங்குகள் தென்பட்டால், அதன் டிரைவர் மற்ற வாகனத்தில் இருப்போருக்கு மொபைல் போனில் தகவல் தெரிவிப்பார்.
உடனே மற்ற வாகனங்கள் அங்கு செல்லும். இதனால், குறுகலான சாலையில் ஒரே நேரத்தில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் கடந்து செல்ல வேண்டி உள்ளது.
மேலும் வேகமாக செல்ல வேண்டும் என்ற நோக்கில் பள்ளம், மேடு பகுதியில் டிரைவர்கள் வாகனங்களை ஓட்டுவதால் சுற்றுலா பயணியருக்கு தொந்தரவு ஏற்டுகிறது. இது குறித்து சுற்றுலா பயணியர் புகார் கூறியதை அடுத்து, பண்டிப்பூரில் வனவிலங்குகள் பார்வையிடும் பகுதியை 'ஏ' மற்றும் 'பி' என பிரிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஒரு பகுதியில் இருக்கும் வாகனம் மற்ற பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட உள்ளது. விரைவில் இதை அதிகாரிகள் அமல்படுத்த உள்ளனர்.
மின் கட்டணம் கட்ட முடியாமல் தவிக்கும் கிராம பஞ்சாயத்து
ஹாசன்: ஹாசன் மாவட்டம், ஷ்ரவணபெலகோளா பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள பிரமாண்ட கோமதீஸ்வரரை காண, தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வருகின்றனர். இதனால் அவர்களுக்கு தேவையான குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்த ஷ்வரணபெலகோளா கிராம பஞ்சாயத்து மாதம்தோறும் பல லட்சம் ரூபாய் செலவிடுகிறது. சுற்றுலா பயணியருக்கு தேவையான குடிநீர் ஹேமாவதி அணையில் இருந்து கொண்டு வரப்படுகிறது.
இதற்காக, பெரிய அளவிலான இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் ஷ்வரவணபெலகோளா கிராம பஞ்சாயத்துக்கு மாதம் 4 லட்சம் ரூபாய் வரை மின்சார பில் வருகிறது. ஆனால் கிராம பஞ்சாயத்துக்கு குறைவாக வருவாய் வரும் காரணத்தால் முழு கட்டணத்தை கட்ட முடியாமல் மாதம், 2 லட்சம் ரூபாய் மட்டுமே மின் கட்டணம் செலுத்துகிறது.
இதன் மூலம் எட்டு ஆண்டுகளில், 3 கோடி ரூபாய் வரை மின் கட்டணம் பாக்கி உள்ளது. ஹெஸ்காம் நிறுவத்தினரும் மின் பாக்கியை கட்டுமாறு பல முறை நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
எனவே, 'கிராம பஞ்சாயத்து பாக்கி மின் கட்டணத்தை செலுத்த, மாநில அரசு கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும்' என கோவில் கமிட்டியினர் மற்றும் ஷ்ரவணபெலகோளா தொகுதி ம.ஜ.த., - எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா வேண்டுகோள் விடுத்துள்ளனர்.மருந்தாளுனர் பற்றாக்குறை
நோயாளிகள் கடும் அவதி
சித்ரதுர்கா: சித்ரதுர்கா செல்லகரே தாலுகா மருத்துவமனை சுமார் 1,000 படுக்கைகள் வசதி கொண்டது. நாள்தோறும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இங்கு நோயாளிகளுக்கு மருந்துகளை வினியோகிக்கும் மருந்தாளுனர்கள் பற்றாக்குறை நிலவுகிறது.
மருத்துவமனையின் 'டி குரூப்' ஊழியர்களே மருந்து சீட்டுகளை வாங்கி, நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகளை வழங்குகின்றனர். இதனால் அதிர்ச்சி அடையும் நோயாளிகள் மருந்து, மாத்திரைகளை வாங்குவதா அல்லது வேண்டாமா என யோசிக்கின்றனர். மேலும் சிலர் வெளியில் இருந்து மருந்து, மாத்திரைகளை வாங்கி வருகின்றனர். 'சுகாதார துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்து, போதுமான மருந்தாளுனர்களை நியமிக்க வேண்டும்' என நோயாளிகள் கூறி உள்ளனர்.
ஒரு பைக்கில் மூவர் பயணம்
போலீசாருடன் வாக்குவாதம்
விஜயபுரா: விஜயபுரா மாவட்ட எஸ்.பி., அலுவலகம் அருகில் போக்குவரத்து போலீசார் நேற்று பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரே இரு சக்கர வாகனத்தில் வந்த மூவரை பிடித்து, 500 ரூபாய் அபராதம் விதித்தனர்.
இதனால் கோபமடைந்த அவர்கள், போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டினர். வாகனத்தை, போலீஸ் நிலையத்துக்கு எடுத்து செல்ல முற்பட்டபோது, இளைஞர்கள் தடுத்தனர். வாக்குவாதம் முற்றியதால், இளைஞர்களையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அந்த வாலிபர்கள் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து, 500 ரூபாய் அபாரதம் செலுத்தி, வாகனத்தை எடுத்து சென்றனர்.