குஜராத் தமிழர்கள் பா.ஜ.,வுக்கு ஓட்டு போடுகின்றனர்: வானதி

Added : டிச 07, 2022 | கருத்துகள் (16) | |
Advertisement
சென்னை: குஜராத்தில் வசிக்கும் தமிழர்கள் பா.ஜ.,வுக்கே ஓட்டளிப்பதாக, அக்கட்சியின் மகளிரணி தேசிய தலைவர் வானதி தெரிவித்துள்ளார்.குஜராத்தில், தேர்தல் பிரசாரம் செய்த அவர் கூறியதாவது: நடந்து முடிந்த குஜராத் சட்டசபை தேர்தலில், பிரசாரம் செய்ய நாடெங்கும் இருந்து, மகளிரணி நிர்வாகிகள் வந்து இருந்தனர். அவர்களின் பிரசாரத்தை ஒருங்கிணைக்கவும், மகளிரணி தேசிய தலைவர் என்ற முறையில்
Vanathi, Vanathi Srinivasan, BJP, Gujarat Election, குஜராத் தமிழர்கள், பாஜ, வானதி

சென்னை: குஜராத்தில் வசிக்கும் தமிழர்கள் பா.ஜ.,வுக்கே ஓட்டளிப்பதாக, அக்கட்சியின் மகளிரணி தேசிய தலைவர் வானதி தெரிவித்துள்ளார்.

குஜராத்தில், தேர்தல் பிரசாரம் செய்த அவர் கூறியதாவது: நடந்து முடிந்த குஜராத் சட்டசபை தேர்தலில், பிரசாரம் செய்ய நாடெங்கும் இருந்து, மகளிரணி நிர்வாகிகள் வந்து இருந்தனர். அவர்களின் பிரசாரத்தை ஒருங்கிணைக்கவும், மகளிரணி தேசிய தலைவர் என்ற முறையில் பிரசாரம் செய்யவும், 10 நாட்களுக்கும் மேலாக குஜராத்தில் பிரசாரம் செய்தேன்.


பா.ஜ.,வை பொறுத்தவரை, வடக்கு, மத்திய, தெற்கு, சவுராஷ்டிரா என, நான்கு மண்டலங்களாக குஜராத் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு மண்டலங்களிலும் பிரசாரம் செய்தேன். பா.ஜ., தேசிய நிர்வாகிகள், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் அணிகளின் தேசிய தலைவர்களுக்கு, ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு, அங்கு மூன்று நாட்கள் தங்கி பிரசாரம் செய்ய, கட்சி தலைமை அறிவுறுத்தியது.

அதன்படி எனக்கு ஒதுக்கப்பட்ட, ஆமதாபாத் மாவட்டம், அசர்வா தொகுதியில் மூன்று நாட்கள் தங்கி, வீடு வீடாக பிரசாரம் செய்தேன். இத்தொகுதியில், 500 தமிழ் குடும்பங்கள் வசிக்கின்றன. அவர்களை வீடு, வீடாக சென்று சந்தித்தேன்.


latest tamil news

மோடி மூன்று முறை வென்ற மணிநகரில், 2,000 தமிழ் குடும்பங்கள் உள்ளன. முதல்முறையாக, மோடி போட்டியிட்ட ராஜ்கோட் தொகுதியிலும், கணிசமான தமிழர்கள் உள்ளனர். தமிழர்கள் குறிப்பிடத்தக்க அளவில் வசிக்கும் சூரத்திலும், பழங்குடியினர் அதிகமாக வசிக்கும் நர்மதா மாவட்டத்திலும் பிரசாரம் செய்தேன்.

பிரசாரத்தின்போது, ஏராளமான தமிழர்களிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. தமிழர்கள் கட்டியுள்ள முருகன், விநாயகர், மாரியம்மன் கோவில்களுக்கு சென்று வழிபட்டேன். அவர்கள் அனைவரும் பிரதமர் மோடி மீது பேரன்பு கொண்டுள்ளனர். பெரும்பாலான தமிழர்கள் பா.ஜ.,வுக்கு ஓட்டளிப்பதாகவும், இந்த தேர்தலிலும் பா.ஜ.,வுக்கு ஓட்டளிப்பதாகவும் தெரிவித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (16)

sankar - சென்னை,இந்தியா
07-டிச-202214:47:54 IST Report Abuse
sankar அப்படியா அம்மணி. நல்லா பார்த்து சொல்லுங்க.
Rate this:
Cancel
07-டிச-202214:42:55 IST Report Abuse
மதுமிதா தமிழகத்தில் கருத்துக் கணிப்பை விட இறைவன் கணிப்பு அதிகம் பா.ஜ.க., ஜெயிக்கும்.
Rate this:
Cancel
Barakat Ali - Medan,இந்தோனேசியா
07-டிச-202213:42:19 IST Report Abuse
Barakat Ali ஆனா ஒரு விஷயம் யோசிக்கிறேன் .... """" உங்க மாநிலத்துல பிஜேபியை ஆட்சிக்கு கொண்டு வர முடியலைன்னாலும் பத்து சீட்டாவது ஜெயிக்க வைக்க முடியலையே """" என்று வானதியம்மாவை அவங்க யாரும் கேட்கலையா ????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X