சென்னை: தமிழக அரசின் பொது வினியோக திட்டத்திற்கு, உணவு பொருட்களை வினியோகம் செய்யும், ஐந்து தனியார் நிறுவனங்களில் நடத்திய வருமான வரிச் சோதனையில், 300 கோடி ரூபாய் வருவாய் மறைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், பொது வினியோக திட்டத்திற்கு எண்ணெய், பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட உணவுப் பொருட்களை, சில நிறுவனங்கள் வினியோகம் செய்து வருகின்றன. இந்த நிறுவனங்கள், முறையாக வரி செலுத்தாமல், வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக புகார் வந்தது.
இதையடுத்து, காமாட்சி அண்டு கோ, பெஸ்ட் டால் மில், அருணாச்சலா இம்பெக்ஸ், இன்டக்ரேட்டடு சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் உட்பட ஐந்து நிறுவனங்கள், அதிகாரிகள் வீடுகள், கிடங்குகள் என, 80க்கும் மேற்பட்ட இடங்களில், வருமான வரி அதிகாரிகள், நவம்பரில் நான்கு நாட்கள் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், பல கோடி ரூபாய் வருவாய் மறைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
![]()
|
அந்த நிறுவனங்களுக்கு தொடர்புடைய இடங்களில், நான்கு நாட்கள் சோதனை நடந்தது. இதில், போலி ரசீதுகள் வாயிலாக விற்பனை செய்தது உட்பட, பல்வேறு வகைகளில், ஐந்து நிறுவனங்களும், 300 கோடி ரூபாய் வரை, வருவாயை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
வரி ஏய்ப்பு செய்ததற்கான முக்கிய ஆவணங்களும், கணக்கில் காட்டப்படாத சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.