சென்னை: கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, திருவண்ணாமலைக்கு, இன்றும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இது குறித்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவண்ணாமலையில், நேற்று மகா தீப திருவிழா நடந்தது. இன்று பவுர்ணமி கிரிவலம் நடக்கிறது. மூன்று நாட்களுக்கு சேர்த்து, 2,700 சிறப்பு பஸ்கள் இயக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதற்காக, அரசு விரைவு போக்குவரத்துத் கழகம், சென்னை, விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோயம்புத்துார், மதுரை மற்றும் திருநெல்வேலி அரசு போக்குவரத்துத் கழகங்களில் இருந்து, பயணியரின் தேவைக்கேற்ப கூடுதல் பஸ்களை இயக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலையில் கூடும் பஸ்களால் நெரிசல் ஏற்படாமல் இருக்க, சிறப்பு பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பயணியரின் தேவையை அறிய, சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், சிறப்பு பஸ் நிலையங்களில் இருந்து, மலையடிவாரம், கிரிவலப்பாதை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் வகையில், சென்னை மாநகர போக்குவரத்துத் கழகம் சார்பில், 40 மினி பஸ்கள் அனுப்பப்பட்டு உள்ளன.