இருப்பு விபர எஸ்.எம்.எஸ்., எண்கள்; ரேஷனில் விளம்பரப்படுத்த உத்தரவு

Added : டிச 07, 2022 | |
Advertisement
சென்னை: அத்தியாவசிய உணவு பொருட்களின் இருப்பு விபரத்தை அறிந்து கொள்ளும், எஸ்.எம்.எஸ்., எண்களை, அனைத்து ரேஷன் கடைகளிலும் விளம்பரம் செய்யுமாறு, அதிகாரிகளுக்கு, கூட்டுறவுத் துறை உத்தரவிட்டு உள்ளது. தமிழக ரேஷன் கடைகளுக்கு, சேமிப்பு கிடங்குகளில் இருந்து, அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அனைத்து பொருட்களும், தேவையான அளவுக்கு சப்ளை செய்யப்படுகிறது. அவற்றை கடைகளில் வைத்தபடி,

சென்னை: அத்தியாவசிய உணவு பொருட்களின் இருப்பு விபரத்தை அறிந்து கொள்ளும், எஸ்.எம்.எஸ்., எண்களை, அனைத்து ரேஷன் கடைகளிலும் விளம்பரம் செய்யுமாறு, அதிகாரிகளுக்கு, கூட்டுறவுத் துறை உத்தரவிட்டு உள்ளது.

தமிழக ரேஷன் கடைகளுக்கு, சேமிப்பு கிடங்குகளில் இருந்து, அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அனைத்து பொருட்களும், தேவையான அளவுக்கு சப்ளை செய்யப்படுகிறது. அவற்றை கடைகளில் வைத்தபடி, ஊழியர்கள் வழங்க மறுப்பதாக புகார்கள் எழுகின்றன.

கடையில் உள்ள பொருட்களின் இருப்பு விபரத்தை, எஸ்.எம்.எஸ்., வாயிலாக அறிந்து கொள்ளும் வசதி உள்ளது.

அதன்படி, கார்டுதாரர்கள் தாங்கள் பதிவு செய்த மொபைல் போன் எண்ணில் இருந்து, உணவு வழங்கல் துறை வெளியிட்டுள்ள எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பினால், இருப்பு விபரம் எஸ்.எம்.எஸ்., ஆக வரும். இந்த விபரம் பலருக்கு தெரிவதில்லை.

எனவே, உணவு பொருட்களின் இருப்பு விபரத்தை அறிந்து கொள்ளக் கூடிய எஸ்.எம்.எஸ்., எண்களை, அனைத்து ரேஷன் கடைகளிலும் விளம்பரம் செய்யுமாறு, அதிகாரிகளுக்கு, கூட்டுறவுத் துறை உத்தரவிட்டு உள்ளது.

ரேஷன் கடைகளில் விளம்பரம் செய்யப்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள தகவல்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X