அக்னிபாத் ராணுவ வீரர் தேர்வில் பங்கேற்ற இளைஞர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இடம்: பீதர்.
-------
'அக்னிபத்' ஆள் சேர்ப்பு
70,000 பேர் விண்ணப்பம்
பீதர்: இந்திய ராணுவத்தில் சேருவதற்கான 'அக்னிபத்' ராணுவ ஆள்சேர்ப்பு பணி, பீதர் மாவட்டம், நேரு மைதானத்தில் நடந்து வருகிறது. கடந்த 5ம் தேதி முதல் வரும் 22ம் தேதி வரை இப்பணி நடக்கிறது.
ராணுவத்தின் பொது பணியாளர், தொழில்நுட்பம், எழுத்தர், வீட்டு காவலர், முடிதிருத்துநர், சமையல் சிப்பாய் பணியிடங்களுக்கான ஆள் சேர்ப்பு நடத்தப்படுகிறது. பொது பிரிவுக்கு 63 ஆயிரத்து 825 பேரும்; இதர பிரிவுக்கு 6,550 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
இதற்காக, பெலகாவி, பீதர், கலபுரகி, யாத்கிர், ராய்ச்சூர், கொப்பால், பல்லாரி, விஜயபுரா உட்பட கர்நாடகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் 70க்கும் மேற்பட்டோர் வருகை தந்துள்ளனர். தினமும், 2,500 பேருக்கு, உடல் தகுதி உட்பட பல்வேறு தேர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
**
பெற்றோருக்கு பாத பூஜை செய்த மாணவியர். இடம்: கலபுரகி.
கல்லுாரி மாணவியர்
பெற்றோருக்கு பாத பூஜை
கலபுரகி: கலபுரகி மாவட்டம், அப்பா பொறியியில் கல்லுாரி முதலாம் ஆண்டு மாணவர்கள், தங்கள் பெற்றோருக்கு பாத பூஜை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை ஊக்கமளிக்கும் பேச்சாளர் சதீஷ், பாத பூஜை குறித்து விளக்கினார். பின், அம்மாவை, 'மம்மி' என்று அழைக்காமல் அம்மா என்றே அழையுங்கள் என்றார்.
பின், மாணவர்கள் அனைவரும், தங்கள் பெற்றோரின் கால்களை சுத்தம் செய்து, குங்குமம், சந்தனம் இட்டு, பூ வைத்து கற்பூரம் ஏற்றி ஆரத்தி காண்பித்தனர். பாத பூஜை செய்த மாணவியர், பெற்றோர் மடியில் தலை சாய்த்தபோது, மகிழ்ச்சியில் கண்ணீர் சிந்தினர். பெற்றோரும் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.
**
காய்கறி சந்தையில் பொருட்களை விலை பேசி வாங்கும் மாணவ - மாணவியர். இடம்: கங்காவதி, கொப்பால்.
சந்தையில் காய்கறி வாங்கும்
பள்ளி மாணவ - மாணவியர்
கொப்பால்: கொப்பால் மாவட்டம், கங்காவதியில் மகான் கிட்ஸ் என்ற பள்ளி உள்ளது. இங்கு ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ளது. இந்த பள்ளி மாணவர்கள், பள்ளிக்கு அருகில் உள்ள சந்தைக்கு சென்று, பொருட்கள் எப்படி விற்கின்றனர், கொள்முதல், எப்படி விற்பனை நடக்கிறது என்ற நடைமுறை அறிவை பெறும் நோக்கில், காய்கறிகளை வாங்குகின்றனர்.
மாணவர்கள், பெரியவர்கள் போன்று வியாபாரிகளிடம் பேரம் பேசி பொருட்களை வாங்குகின்றனர். இதற்கு பெற்றோரும், ஆசிரியர்களும் ஆதரவளித்துள்ளனர்.
பள்ளி நிர்வாக குழு தலைவர் நேத்ராஜ் குருவின மத் கூறுகையில், ''குழந்தைகளுக்கு பள்ளியில் கோட்பாடு பாடங்கள் கற்பித்தாலும், அவை நடைமுறை பயிற்சியை போல பயனுள்ளதாக இருக்காது. எனவே, நேரடியாக சந்தைக்கு அனுப்பி, அவர்களுக்கு வாழ்க்கை திறன் கற்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது,'' என்றார்.
**
மூக்கை மூட வைக்கும்
ஏ.பி.எம்.சி., மார்க்கெட்
விஜயநகரா: விஜயநகரா மாவட்டம், ஹொஸ்பேட்டில் உள்ள ஏ.பி.எம்.சி., மார்க்கெட், 24 ஏக்கரில் அமைந்துள்ளது. 168 கடைகளில், 114 கடைகள் செயல்படுகின்றன. இங்கு காய்கறிகள் உட்பட பல்வேறு உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் சுகாதாரம், துாய்மை மட்டும் காணவில்லை.
விற்காத காய்கறிகள், மார்க்கெட்டின் ஒரு பகுதியில் கொட்டப்படுகிறது. இதனால் மார்க்கெட்டுக்குள் நுழைந்தாலே, துர்நாற்றம் வீசுகிறது. ஏ.பி.எம்.சி.,க்கு வருமானம் இருந்தும், விவசாயிகளுக்கு மின்சாரம், குடிநீர், கழிப்பறை உட்பட கட்டமைப்பு வசதிகள் இல்லை.
'புரோக்கர்களின் கூடாரமாக மாறியுள்ள இந்த மார்க்கெட்டில் துாய்மைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்' என விவசாயிகள், மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
***
சந்தையில் காய்கறி வாங்கும் மாணவ - மாணவியர்
கொப்பால்: கொப்பால் மாவட்டம், கங்காவதியில் மகான் கிட்ஸ் என்ற பள்ளி உள்ளது. இங்கு ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ளது.
இந்த பள்ளி மாணவர்கள், பள்ளிக்கு அருகில் உள்ள சந்தைக்கு சென்று, பொருட்கள் எப்படி விற்கின்றனர், கொள்முதல், எப்படி விற்பனை நடக்கிறது என்ற நடைமுறை அறிவை பெறும் நோக்கில், காய்கறிகளை வாங்குகின்றனர்.
மாணவர்கள், பெரியவர்கள் போன்று வியாபாரிகளிடம் பேரம் பேசி பொருட்களை வாங்குகின்றனர்.
இதற்கு பெற்றோரும், ஆசிரியர்களும் ஆதரவளித்துள்ளனர்.
பள்ளி நிர்வாக குழு தலைவர் நேத்ராஜ் குருவின மத் கூறுகையில், ''குழந்தைகளுக்கு பள்ளியில் கோட்பாடு பாடங்கள் கற்பித்தாலும், அவை நடைமுறை பயிற்சியை போல பயனுள்ளதாக இருக்காது. எனவே, நேரடியாக சந்தைக்கு அனுப்பி, அவர்களுக்கு வாழ்க்கை திறன் கற்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது,'' என்றார்.