''முதல்வர் பாதுகாப்பு சம்பந்தமான கூட்டத்துக்கு போறதை செய்தித் துறை அதிகாரிகள் தவிர்க்கறா ஓய்...'' என, அடுத்த தகவலை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''என்ன காரணம்னு சொல்லும்...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''முதல்வர் பங்கேற்கற விழாவுக்கு முந்தைய நாள், பாதுகாப்பு சம்பந்தமான கூட்டம் நடத்துவா... அதுல போலீஸ் உயர் அதிகாரிகள் உட்பட பல்வேறு துறை அதிகாரிகளும் கலந்துப்பா ஓய்...
''செய்தித் துறை சார்பா, இணை அல்லது துணை இயக்குனர்களோ, பி.ஆர்.ஓ.,க் களோ தான் கலந்துக்கணும்... ஆனா, அவா கலந்துக்காம ஏ.பி.ஆர். ஓ.,க்களை அனுப்பிச்சுடறா ஓய்...
![]()
|
''அவாளை போலீஸ் அதிகாரிகள் மதிக்கறதே இல்ல... பத்திரிகையாளர்களுக்கு இருக்கைகள் ஒதுக்கறது சம்பந்தமா, ஏ.பி.ஆர்.ஓ.,க்கள் ஏதாவது சொல்ல முற்பட்டா, அவாளை பேச விட்டாத்தானே... இதனால, முதல்வர் விழாவுல நிறைய குளறுபடிகள் நடக்கறது ஓய்...
''சமீபத்துல நடந்த சில விழாக்கள்ல, பத்திரிகையாளர்களுக்கு பின் சீட்களை ஒதுக்கிட்டா... இதனால, செய்தி சேகரிக்க முடியாம அவா சிரமப்பட்டா... இனியாவது, இந்த மாதிரி கூட்டங்கள்ல சீனியர் அதிகாரிகள் கலந்துண்டா நன்னா இருக்கும் ஓய்...'' என்றார், குப்பண்ணா.