சித்ரதுர்கா : சித்ரதுர்கா தொழுநோய் மருத்துவனை கட்டுப்பாட்டு அதிகாரி மர்மச்சாவு விவகாரத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையின் போது அவரது தலையில் இருந்து துப்பாக்கி குண்டு எடுக்கப்பட்டு உள்ளது.
சித்ரதுர்காவில் உள்ள தொழுநோய் மருத்துவமனையில், கட்டுப்பாட்டு அதிகாரியாக பணியாற்றி வந்தவர் டாக்டர் ரூபா, 40.
இவர் கடந்த 4ம் தேதி செல்பில் தலை மோதியதால் உயிரிழந்து விட்டதாக அவரது கணவர் ரவி, 45 கூறினார். ரூபாவின் கணவரும் டாக்டர்தான். எலும்பு நோய் நிபுணரான இவர், சித்ரதுர்காவில் கிளினிக் நடத்துகிறார்.
பெண் டாக்டரின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதன் அறிக்கை தற்போது வெளிவந்துள்ளது. அதில், ரூபாவின் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ரூபா கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது சகோதர் சித்ரதுர்கா போலீசில் புகார் அளித்துள்ளார்.
துப்பாக்கி குண்டை பறிமுதல் செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.