தற்கொலை முடிவை மாற்றிய வாலிபர் பெண் எஸ்.ஐ., மீது 'டார்ச்சர்' புகார்

Added : டிச 07, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
ராய்ச்சூர், : பெண் எஸ்.ஐ., தொந்தரவு அளிப்பதால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கடிதம் எழுதி வைத்து, காணாமல் போனவர் பல்லாரியில் கண்டுபிடிக்கப்பட்டார்.ராய்ச்சூரு, சிராவாராவைச் சேர்ந்தவர் தாயன்னா, 27. இவர், 'சிரவாரா போலீஸ் நிலையத்தின் பெண் எஸ்.ஐ., கீதாஞ்சலி ஷிண்டே, தனக்கு விசாரணை என்ற பெயரில் தொந்தரவு அளிக்கிறார். எனவே, தற்கொலை செய்து கொள்கிறேன்' என, கடிதம் எழுதி
 தற்கொலை முடிவை மாற்றிய வாலிபர் பெண் எஸ்.ஐ., மீது 'டார்ச்சர்' புகார்



ராய்ச்சூர், : பெண் எஸ்.ஐ., தொந்தரவு அளிப்பதால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கடிதம் எழுதி வைத்து, காணாமல் போனவர் பல்லாரியில் கண்டுபிடிக்கப்பட்டார்.

ராய்ச்சூரு, சிராவாராவைச் சேர்ந்தவர் தாயன்னா, 27. இவர், 'சிரவாரா போலீஸ் நிலையத்தின் பெண் எஸ்.ஐ., கீதாஞ்சலி ஷிண்டே, தனக்கு விசாரணை என்ற பெயரில் தொந்தரவு அளிக்கிறார். எனவே, தற்கொலை செய்து கொள்கிறேன்' என, கடிதம் எழுதி வைத்துவிட்டு கடந்த 3ம் தேதி காணாமல் போனார்.

அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

பெண் எஸ்.ஐ., நில விவகாரத்தில், விசாரணை என்ற பெயரில் மூன்று மாதங்களாக எனக்கு தொந்தரவு தருகிறார். நான் ரோட்டில் நடந்து சென்றாலும் ஜீப்பில் வந்து தலையில் அடித்து விட்டு செல்கிறார். கடந்த 2ம் தேதி போலீஸ் நிலையத்துக்கு அழைத்தார்.

ஆனால், என்னிடம் எந்தவிதமான விசாரணையும் நடத்தாமல், லாக்கப்பில் பல மணி நேரம் உட்கார வைத்து விட்டு, அனுப்பினார். இதுபோன்ற தொந்தரவு தாளாமல் தற்கொலை செய்கிறேன்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டிருந்தது.

இது தொடர்பாக, தாயன்னாவின் சகோதரர் பசவலிங்கா, 30 அளித்த புகாரின்படி பெண் எஸ்.ஐ., மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. காணாமல் போன வாலிபரை போலீசார் தேடி வந்தனர். தாயன்னாவின் குடும்பத்தினரும் அவர் உயிரிழந்து விட்டதாக கருதினர்.

இந்நிலையில், காணாமல் போன தாயன்னா, தற்கொலை முடிவை மாற்றிக் கொண்டு பல்லாரியில் உள்ள டி.ஐ.ஜி., அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் அளிக்க சென்றார். அவர் பெண் எஸ்.ஐ., மீது புகார் அளித்தவர் என்பதால், சிரவாராவுக்கு அனுப்பி வைத்தனர்.

நேற்று சிரவாரா போலீஸ் நிலையத்திற்கு வந்தவரிடம், 'இனி இதுபோல கடிதம் எழுதி வைத்து விட்டு காணாமல் போக மாட்டேன்' என பத்திரத்தில் எழுதி வாங்கி கொண்டு போலீசார் அனுப்பி வைத்தனர். இதன்மூலம் பெண் எஸ்.ஐ., மற்றும் வாலிபரின் குடும்பத்தினர் நிம்மதி அடைந்தனர்.

தாயன்னா கீதாஞ்சலி

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து (2)

N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
12-டிச-202208:59:00 IST Report Abuse
N Annamalai வித்யாசமான நிகழ்வு .சீரியல் கதை ஒன்று தயார்
Rate this:
Cancel
Sankaran - chennai,இந்தியா
08-டிச-202208:49:22 IST Report Abuse
Sankaran too much of opportunities for women....its going to lot of issues in society...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X