வேலுார்: நீர் பாசன துறை அமைச்சர் துரைமுருகனின் அண்ணன் மகள், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
தி.மு.க., பொதுச் செயலரும், மாநில நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகனின் மூத்த சகோதரர், துரை மகாலிங்கம்; கடந்தாண்டு இறந்து விட்டார். இவரது மகள் பாரதி, 55, கணவர் ராஜ்குமார், இரண்டு மகள்கள், மகனுடன், வேலுார் மாவட்டம், காட்பாடியில் வசித்து வந்தார்.
காட்பாடி அருகே லத்தேரியில், ரயில் தண்டவாளத்தில் உடல் துண்டான நிலையில், பெண் உடல் ஒன்று, நேற்று முன்தினம் கிடந்தது. ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார், உடலைக் கைப்பற்றி விசாரித்தனர். இறந்து கிடந்தது பாரதி என்பதும், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரிந்தது. குடும்ப பிரச்னை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படுகிறது.