வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சிங்கப்பூர்: 'போர்ப்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ள ஆசியாவின் சிறந்த கொடை யாளிகள் பட்டியலில், தொழிலதிபர்கள் கவுதம் அதானி மற்றும் ஷிவ் நாடார் இடம் பெற்றுள்ளனர்.
அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'போர்ப்ஸ்' பத்திரிகை, ஆண்டுதோறும் உலக பணக்காரர்கள், செல்வாக்குமிக்க மனிதர்கள் உட்பட பல்வேறு பட்டியல்களை வெளியிட்டு வருகிறது.
இந்த வகையில், ஆசிய அளவிலான சிறந்த நன்கொடை யாளர்கள் பட்டியலை 15 ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறது. இதன் 16ம் ஆண்டுக்கான பட்டியல் சமீபத்தில் வெளியானது. இதில், குஜராத்தைச் சேர்ந்த, அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி இடம் பிடித்துள்ளார்.
![]()
|
இந்த தொகை, சுகாதாரம், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுக்கு செலவிடப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார். இவரது அறக்கட்டளை வாயிலாக ஆண்டுதோறும், 37 லட்சம் இந்தியர்கள் பயன் அடைகின்றனர். அடுத்தபடியாக, தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஷிவ் நாடார், இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
![]()
|
இவர்களை தவிர, ஐ.டி., துறையைச் சேர்ந்த தொழிலதிபர் அசோக் சூட்டா, மலேஷியாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி தொழிலதிபர் பிரமால் வாசுதேவன் ஆகியோரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.