தங்கவயல் : தங்கவயலில் வரும் 9 முதல் 11ம் தேதி வரை மூன்று நாட்கள்ஒயின் திருவிழா நடக்கிறது.
தங்கவயல் பெமல் நகர் ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்சில்ஒயின் திருவிழா நடக்கிறது. கர்நாடக அரசின தோட்டக் கலைத் துறை, திராட்சை உற்பத்தி மற்றும் ஒயின் வாரியம் சார்பில் இம்மாதம் 9 முதல் -11ம் தேதி வரை மூன்று நாட்கள் திருவிழா நடக்கிறது.
தினமும் காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை விழா நடக்கும். நுழைவு கட்டணம் 20 ரூபாய். இத்திருவிழாவில் 10 சதவீத தள்ளுபடி விலையில் ஒயின் விற்பனை செய்யப்படுகிறது. மூன்று நாட்களும் மாலை 7:00 மணிக்கு ஆடல், பாடல் நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.
இதற்கான ஏற்பாடுகளை, கர்நாடக திராட்சை மற்றும் ஒயின் வாரிய தலைவர் ரவி நாராயண ரெட்டி, இயக்குனர் கார்த்திக் அபிஷேக், தோட்டக்கலைத் துறை இணை இயக்குனர் குமாரசாமி ஆகியோர் செய்துள்ளனர்.