ரூ.30 லட்சம் மோசடி: தாய், மகள் கைது

Added : டிச 07, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
சென்னை: தாம்பரம்அடுத்த சேலையூர், இந்திரா நகரைச் சேர்ந்தவர் ரெஜிகுமார், 47; எல்.ஐ.சி., ஏஜன்ட்.இவரது கணவர் இறந்தநிலையில், மென்பொறியாளரான மகள் ஜூலியுடன், 25, வசித்து வந்தார்.கடந்தாண்டு, ஜூலியின் திருமண செலவிற்காக, அதே பகுதியைச் சேர்ந்த கவிதா, மோகன், ஜீவரத்தினம்உள்ளிட்ட பலரிடம், 30 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கினார்.திருமணம் முடிந்த பின், மேற்கண்ட மூவரும் பணத்தை திருப்பி
 ரூ.30 லட்சம் மோசடி: தாய், மகள் கைது

சென்னை: தாம்பரம்அடுத்த சேலையூர், இந்திரா நகரைச் சேர்ந்தவர் ரெஜிகுமார், 47; எல்.ஐ.சி., ஏஜன்ட்.இவரது கணவர் இறந்தநிலையில், மென்பொறியாளரான மகள் ஜூலியுடன், 25, வசித்து வந்தார்.

கடந்தாண்டு, ஜூலியின் திருமண செலவிற்காக, அதே பகுதியைச் சேர்ந்த கவிதா, மோகன், ஜீவரத்தினம்உள்ளிட்ட பலரிடம், 30 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கினார்.

திருமணம் முடிந்த பின், மேற்கண்ட மூவரும் பணத்தை திருப்பி கேட்டபோது, ரெஜிகுமார் போலி காசோலை கொடுத்துள்ளார். ஆத்திரம் அடைந்த மூவரும், ரெஜிகுமாரின் புகைப்படத்தை 'செக் மோசடி கும்பல்' என வீட்டின் சுவரில்ஒட்டினர்.

இது குறித்து, ரெஜிகுமார் தாம்பரம் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். விசாரித்த சேலையூர் போலீசார் மூவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

சிறையில் இருந்து வெளியே வந்த கவிதா, மோகன், ஜீவரத்தினம் மற்றும் சிலர், நேற்று மாலை, கிழக்கு தாம்பரம் பகுதியில், மீன் வாங்குவதற்காக வந்த ரெஜிகுமாரை முற்றுகையிட்டு, பணத்தை திருப்பி தருமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், சலசலப்பு ஏற்பட்டது.

சேலையூர் போலீசார்விசாரணையில்,ரெஜிகுமார் மற்றும் அவரது மகள் ஜூலி ஆகியோர், திருமணத்திற்காக பலரிடம் 30 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி, மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, இருவரும்கைதுசெய்யப்பட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து (5)

NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
11-டிச-202222:27:21 IST Report Abuse
NicoleThomson கடன் கொடுத்தவங்க திருப்பி கேட்டால் கைது , எங்கே சென்று கொண்டுள்ளது தமிழக போலீஸ்? விசாரிக்கும் மனப்பக்குவம் அறவே போய்விட்டதா
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
08-டிச-202213:15:46 IST Report Abuse
Krishnamurthy Venkatesan கடன் கொடுத்தார் நெஞ்சம்போல் ................
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
08-டிச-202209:33:57 IST Report Abuse
Kumar இந்த மாதிரி சிவில் கேஷ்க்கு எப்படி கைது செய்ய முடியும்? அப்ப தமிழக விடியல் அரசு கூட பல லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளது.அப்ப யாரை கைது செய்ய?
Rate this:
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
10-டிச-202208:30:54 IST Report Abuse
வாய்மையே வெல்லும்முதலில் வங்கி சம்பந்த பட்ட அடிப்படை சட்ட நூல்களை படித்து விட்டு பதிவு போட்டால் நல்லதாக இருக்கும்.. ஏன் என்றால் உங்களின் பதிவை படிப்பவர்கள் சிலபேரு நன்றாக படித்து இருக்கலாம் அவர்களுக்கு கண்மூடித்தனமான மொட்டை தாத்தா குட்டையில் விழுந்த மாதிரி பதிவு ஆச்சரியத்தை கொடுக்கலாம்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X