மயிலாடுதுறை : பணிச்சுமையால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக மயிலாடுதுறையில் பெண் ஒருவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் அழகுபாண்டியபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவசுந்தரம் மகன் ஆனந்த், 42; மளிகை கடை நடத்துகிறார்.
இவரது மனைவி அனிதா, 36, மருத்துவ துறையில், மயிலாடுதுறை யானைக்கால் நோய் தடுப்பு பிரிவில் உதவி களப்பணியாளராக பணியாற்றினார்.
இந்நிலையில் கடந்த 3ம் தேதி பணியை முடித்த அனிதா, அலுவலகத்திலேயே தங்கினார்.
மறுநாள் காலை அலுவலகத்திற்கு வந்த ஊழியர்கள் கதவு உள்தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தால் தட்டி கூப்பிட்டுள்ளனர்.
வெளியே வராததால் பூட்டை உடைத்து உள்ளே சென்றபோது மின்விசிறியில் அனிதா துாக்கிட்டு இறந்தது தெரிய வந்தது.
மயிலாடுதுறை போலீசார், அனிதா உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அனிதாவின் கணவர் ஆனந்த் நேற்று முன்தினம் மயிலாடுதுறை வந்தார்.
அவர் அளித்த புகாரில், 'பணிச்சுமை காரணமாகவே அவர் இறந்தார்' என்றார். போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.