அமராவதி: ஆந்திரா குண்டூரைச் சேர்ந்த மென் பொறியாளர் ஞானேஸ்வர், பல் மருத்துவ மாணவியான 20 வயது தபஸ்வியை 2 ஆண்டுகளாக காதலித்தார். கருத்து வேறுபாட்டால் சில மாதங்களுக்கு முன் ஞானேஸ்வரின் நட்பை தபஸ்வி தவிர்த்துள்ளார். தபஸ்வி குண்டூர் அருகே தக்கலப்படுவில் உள்ள தோழி வீட்டில் தங்கியிருப்பது அறிந்து அங்கு சென்ற ஞானேஸ்வர் அவரது கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தார். போலீசார் ஞானேஸ்வரை கைது செய்தனர்.
துண்டித்த தலையுடன் 'செல்பி' எடுத்த கொலையாளியின் நண்பர்கள் கைது
குந்தி: ஜார்க்கண்டில் நிலத்தகராறு காரணமாக இளைஞர் ஒருவர் உறவினரின் தலையை வெட்ட, துண்டித்த தலையுடன் இளைஞரின் நண்பர்கள் 'செல்பி' எடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்டின் குந்தி மாவட்டத்தில் உள்ள முர்ஹு கிராமத்தில் வசித்தவர் கனு முண்டா, 24. இவருக்கும், இவரது உறவினர் சாகர் முண்டாவுக்கும், 20, இடையே நிலத்தகராறு இருந்தது. இந்நிலையில், சமீபத்தில் தன் நண்பர்களுடன் கனு வீட்டுக்கு வந்த சாகர், அவரை கடத்திச் சென்றார். அருகிலிருந்த வனப்பகுதியில் வைத்து, கனுவின் தலையை சாகர் அரிவாளால் வெட்டி துண்டித்தார். பின், சாகரின் நண்பர்கள், துண்டித்த தலையுடன் மொபைல் போனில் 'செல்பி' எடுத்துக் கொண்டனர்.
இதையடுத்து உடலையும், தலையையும் வெவ்வேறு இடத்தில் வீசி விட்டு தப்பினர். கனு முண்டாவின் தந்தை கொடுத்த புகார்படி வழக்குப் பதிவு செய்த போலீசார், கனுவின் உடல் மற்றும் தலையை வனப்பகுதியில் நேற்று கண்டுபிடித்தனர். கொலையாளி சாகர், அவரது மனைவி உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஐந்து மொபைல் போன்கள், அரிவாள் மற்றும் ஒரு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தமிழக நிகழ்வுகள்:
மாணவருக்கு கத்திக்குத்து; சக மாணவர் கைது
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏற்பட்ட தகராறில் 17 வயது பிளஸ் 2 மாணவரை கத்தியால் குத்திய சக மாணவரை போலீசார் கைது செய்தனர்.
இப்பள்ளியில் பிளஸ் 2 தொழிற்பயிற்சி பிரிவு மாணவர்களில் ஒருவரது புத்தகம் காணாமல்போனதால் இந்த இரு மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. நேற்று கத்தியுடன் வந்த ஒரு மாணவர் காலை 11:30 மணிக்கு இடைவேளையின் போது சக மாணவரை முதுகில் கத்தியால் குத்தினார்.
இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கத்தியால் குத்திய மாணவரை போலீசார் கைது செய்தனர்.
ஏர்போர்ட்டில் துப்பாக்கி பறிமுதல்
அவனியாபுரம் : மதுரை விமான நிலையத்தில், மாணவர் கொண்டு வந்த, 'ஏர்கன்' பறிமுதல் செய்யப்பட்டது.
![]()
|
காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரியைச் சேர்ந்தவர் நிர்மல்பிரபு, 26; சென்னை செல்வதற்காக நேற்று மதியம் மதுரை விமான நிலையம் வந்தார். அவரது உடைமைகளை சோதித்த போது, ஏர்கன் இருந்ததால், அதை மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பறிமுதல் செய்தனர். மேலும், அவரிடம் அவனியாபுரம் போலீசார் விசாரித்தனர். பயண அவசரத்தில் தவறுதலாக எடுத்து வந்ததாக நிர்மல் பிரபு கூறினார். 'எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் வர வேண்டும்' என, கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு, வேறு விமானத்தில் அவரை சென்னைக்கு அனுப்பினர்.
போலீசார் கூறியதாவது: கல்லுாரி ஒன்றில் எம்.சி.ஏ., படிக்கும் நிர்மல்பிரபு, நண்பர் திருமணத்திற்காக காரில் பழநி வந்தார். திருமணம் முடிந்ததும் விமானத்தில் செல்ல மதுரைக்கு வந்தபோது தான், ஏர்கன்னை தவறுதலாக எடுத்து வந்தது அவருக்கு தெரிந்தது. இவ்வாறு கூறினர்.
உலக நிகழ்வுகள்:
ஆப்கனில் குண்டு வெடிப்பு: 6 பேர் உடல் சிதறி பலி
காபூல்: ஆப்கானிஸ்தானில், சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில், அரசு ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் வெடித்துச் சிதறி, ஆறு பேர் உயிரிழந்தனர்; ஏழு பேர் பலத்த காயமடைந்தனர்.துள்ளார்.
மெக்சிகோ துப்பாக்கி சூடு: 8 பேர் பலி
மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் உள்ள மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் உயிரிழந்தனர். இங்கு நடந்த மற்றொரு சம்பவத்தில் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.