'மாண்டஸ்' புயலை எதிர்கொள்ள அரசு... தயார் தயார்; பேரிடர் மேலாண்மை மீட்புக்குழு வருகை

Added : டிச 07, 2022 | |
Advertisement
'மாண்டஸ்' புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி தலைமை செயலகத்தில் அனைத்துதுறை அதிகாரிகள் பங்கேற்ற பேரிடர் மேலாண்மை ஆய்வு கூட்டம் நடந்து.வங்கக்கடலில் நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு, வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை நோக்கி நகரும் .இந்த தாழ்வு மண்டலம் நாளை 8ம் தேதி புயலாக
'மாண்டஸ்' புயலை எதிர்கொள்ள அரசு... தயார்  தயார்;  பேரிடர் மேலாண்மை மீட்புக்குழு வருகை


'மாண்டஸ்' புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி தலைமை செயலகத்தில் அனைத்துதுறை அதிகாரிகள் பங்கேற்ற பேரிடர் மேலாண்மை ஆய்வு கூட்டம் நடந்து.

வங்கக்கடலில் நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு, வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை நோக்கி நகரும் .

இந்த தாழ்வு மண்டலம் நாளை 8ம் தேதி புயலாக வலுப்பெற்று தமிழக வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியை நெருங்கும். இதனால் இன்று முதல் மூன்று நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிக கன மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இந்த புயல் மற்றும் கனமழையை எதிர்கொள்வது தொடர்பாக நேற்று தலைமைச் செயலகத்தில் அனைத்துத் துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு தலைமைச் செயலர் (பொறுப்பு) ராஜிவ், கலெக்டர் வல்லவன் ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தில், புயல் மற்றும் கன மழை பெய்தால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பாதிப்பு ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய மீட்பு பணிகள் குறித்து துறை வாரியாக ஆலோசிக்கப்பட்டது.

கூட்டம் முடிந்த பின் கலெக்டர் வல்லவன் கூறியதாவது;

வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை தொடர்ந்து மீட்பு பணிக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மேலாண்மைக் குழுக்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் மீன் பிடிக்க கடலுக்கு சென்ற 453 விசைப் படகுகள் உள்ளிட்ட 2,353 படகுகள் கரைக்கு வரவழைக்கப்பட்டுள்ளது.


163 பாதுகாப்பு மையங்கள்புதுச்சேரி மாவட்டத்தில் மட்டும் 163 புயல் பாதுகாப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை, வருவாய்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சி துறை, மின்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் திறக்கப்பட்டுள்ளது. 1070 மற்றும் 1077 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 24 மணி நேரமும் செயல்படும்.


தயார் நிலையில் சுகாதாரத்துறை24 மணி நேரமும் இயங்கக்கூடிய வகையில் டாக்டர்கள் தலைமையிலான மருத்துவக் குழுக்கள் தேவையான மருந்துகளுடன் தயார் நிலையில் உள்ளது. கனமழையின் போது தடையற்ற குடிநீர் வழங்குவதற்காக ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மாநிலத்தில் மழை நீர் தேங்கும் இடங்கள் கண்டறியப்பட்டு அதற்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதையும் மீறி தண்ணீர் தேங்கினால் மோட்டார்களை கொண்டு தண்ணீரை வெளியேற்ற ஜெனரேட்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஜெ.சி.பி., இயந்திரங்கள் போதியளவு தயார் நிலை உள்ளது.


மரத்தை அகற்ற குழுமரம் விழுந்தாலோ அல்லது மின் கம்பிகள் அறுந்து விழுந்தாலோ உடனுக்குடன் அகற்ற பொதுப்பணித்துறை, மின்துறை, வருவாய் மற்றும் உள்ளாட்சி துறையினரைக் கொண்ட ஒருங்கிணைந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. கன மழை பெய்தால் அவற்றை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தாயார் நிலையில் உள்ளது.


அவசர கால நிதி ஒதுக்கீடுதற்போது மீட்பு பணிகளுக்காக நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு முதல்கட்டமாக தலா ரூ.5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மரங்களை அப்புறப்புடுத்த கருவிகள் வாங்குவதற்கு வனத்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தலா ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

அவரச தேவையை எதிர்கொள்வதற்காக ஒவ்வொரு துணை கலெக்டருக்கும் தலா ரூ.5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இது மீட்பு நடவடிக்கைகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படும். மழைக்கு பிறகு சேதத்தை கணக்கெடுத்து மத்திய அரசிற்கு அறிக்கை சமர்பித்து, நிவாரண உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.


உணவு பொட்டலம்உணவு வழங்குவதற்கு ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மழை பாதிப்பின் போது தினம் 80 ஆயிரம் உணவு பொட்டலங்கள் தயார் செய்து அட்ஷய பாத்திரம் நிறுவனம் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால், தொகுதிகளுக்கு நாள் ஒன்றுக்கு 3,000 உணவு பொட்டலங்கள் தாசில்தார் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


பாதிப்பு பகுதிகள்:புதுச்சேரியில் தண்ணீர் தேங்கும் பாவாணன் நகர், பூமியான்பேட்டை, இந்திராகாந்தி சதுக்கம், நடேசன் நகர் பகுதிகள் பாதிப்பு பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் வெங்கட்டா நகர், செல்லா நகர், ரெயின்போ நகர், தென்றல் நகர் பகுதிகளில் தேங்கும் தண்ணீர் பம்பு மூலம் வெளியேற்றப்படும். 145 ஆத்ம மித்ரா, 63 தன்னார்வலர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறதுவாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X