திருத்தணி கோவிலில் திரண்ட பக்தர்கள்

Added : டிச 07, 2022 | |
Advertisement
திருத்தணி : திருத்தணி முருகன் மலைக் கோவிலில், நேற்று, கார்த்திகை மாத கிருத்திகை விழாவை ஒட்டி, காலை, 9:00 மணிக்கு, காவடி மண்டபத்தில், உற்சவர் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.மாலை 6:00 மணிக்கு, உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில், தேர்வீதியில் பிரசாத கடை அருகே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
 திருத்தணி கோவிலில் திரண்ட பக்தர்கள்



திருத்தணி : திருத்தணி முருகன் மலைக் கோவிலில், நேற்று, கார்த்திகை மாத கிருத்திகை விழாவை ஒட்டி, காலை, 9:00 மணிக்கு, காவடி மண்டபத்தில், உற்சவர் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.

மாலை 6:00 மணிக்கு, உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில், தேர்வீதியில் பிரசாத கடை அருகே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அப்போது, அங்கு வைக்கப்பட்ட சொக்கப்பனையில், நெய் தீபம் ஏற்றப்பட்டது.

அதே நேரத்தில், கோவிலின் எதிரில் உள்ள, பச்சரிசி மலையில், பெரிய அகல் விளக்கில், 350 கிலோ நெய், இரண்டரை அடி கனம், 10 மீ., நீளமுள்ள திரியில், மஹா தீபம் ஏற்றப்பட்டது.

அப்போது, மலைக் கோவிலில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், பச்சரிசி மலையில் தீபம் மற்றும் சொக்கபனையில் தீபத்தை பார்த்து, 'அரோகரா, அரோகரா' என, பக்தி முழக்கமிட்டனர்.

* மத்துார், மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று, கார்த்திகை மஹா தீபத்தையொட்டி, மூலவர் அம்மனுக்கு, 108 பால்குட அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் கோவில் வளாகம் முழுதும் நெய் தீபங்கள் ஏற்றி வழிபட்டனர்.

* நகரி டவுனில் உள்ள கரியமாணிக்க பெருமாள், புக்கை காசிவிஸ்வநாதர், நாகலாபுரம் வேத நாராயண சுவாமி, நாராயணவனம் கல்யாண வெங்கடேச பெருமாள் கோவில், சத்திரவாடா கரிய வரதராஜபெருமாள்,சிதம்பரேஸ்வரர், நகரி கரகண்டேஸ்வர், டி.ஆர்.கண்டிகை தேசம்மாள் கோவில்களில், மஹா தீபம் ஏற்றப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X