சென்னை: சென்னை கோபாலபுரத்தில் உள்ள நியூ லைப் மெட் என்னும் தனியார் மருத்துவமனையின் 2வது தளத்தில் இன்று (டிச.,7) காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து தேனாம்பேட்டை, தி.நகர், அசோக்நகரில் இருந்து தீயணைப்பு மீட்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். காலை நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் நோயாளிகள் அதிர்ச்சியடைந்தனர்.