காங்., - ‛‛ஜெயா காங்.,'' - அதிமுக - இபிஎஸ் அதிமுக - ஓபிஎஸ் அதிமுக - திமுக: 6 கட்சிகள் தாவிய ‛‛கொள்கை வீரர்'' கோவை செல்வராஜ்

Updated : டிச 07, 2022 | Added : டிச 07, 2022 | கருத்துகள் (50) | |
Advertisement
சென்னை: அதிமுக முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த நிலையில், இன்று (டிச.,7) சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக.,வில் இணைந்தார்.இது தொடர்பாக கோவை செல்வராஜ் கூறியதாவது: தமிழகத்தையும், தமிழக மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதில் முதல்வர் ஸ்டாலினை தவிர, மற்ற எந்த தலைவருக்குமே
dmk, admk, selvaraj, கோவை செல்வராஜ், திமுக, முதல்வர் ஸ்டாலின், அதிமுக

சென்னை: அதிமுக முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த நிலையில், இன்று (டிச.,7) சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக.,வில் இணைந்தார்.

இது தொடர்பாக கோவை செல்வராஜ் கூறியதாவது: தமிழகத்தையும், தமிழக மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதில் முதல்வர் ஸ்டாலினை தவிர, மற்ற எந்த தலைவருக்குமே தகுதியில்லை. ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையினால், அதிமுக.,வில் தொடர விருப்பமில்லை; அதனால் விலகி திமுக.,வில் இணைகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.




யார் இந்த கோவை செல்வராஜ்?



latest tamil news

கடந்த 1991 - 96ம் ஆண்டில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக இருந்தவர், கோவை செல்வராஜ். அ.தி.மு.க., - காங்., கூட்டணி முறிந்த பின், சட்டசபையில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க., ஆதரவு காங்., - எம்.எல்.ஏ.,வாக, கோவை செல்வராஜ் செயல்பட்டார். அப்போது அவர், 'ஜெயா' காங்., - எம்.எல்.ஏ., என அழைக்கப்பட்டார்.


தமிழக காங்., சேவாதள மாநில தலைவர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர். பின் காங்கிரசில் இருந்து விலகி, ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.,வில் இணைந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின், பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.,வை ஆதரித்தார். அவருக்கு அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் பதவியும் வழங்கப்பட்டது.


கடந்த, 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும், 2021ம் ஆண்டின் சட்டசபை தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு தரவில்லை. இதனால், பழனிசாமி மீது அதிருப்தி அடைந்தார்; பன்னீர்செல்வம் தலைமையை ஆதரித்தார்.


பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க.,வில், கோவை மாநகர் மாவட்ட செயலராக நியமிக்கப்பட்டார். அவருக்கும், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கும் கோஷ்டி மோதல் உருவானது. இதையடுத்து, மாவட்ட செயலர் பதவியை ராஜினாமா செய்து தற்போது திமுக.,வில் ஐக்கியமாகியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (50)

rukmani - princeton,யூ.எஸ்.ஏ
08-டிச-202203:16:25 IST Report Abuse
rukmani இன்ட்ரைய அரசியலில் முக்காலே மூவாசி (97.5% ) நபர்கள் கொள்கை என்பது முதலில் தன்னையும் அடுத்தது தனது சுற்றத்தாரையும் வலமுற செய்வது தான். "துக்ளக்" துர்வாசர் பாணியில் மற்றதை எல்லாம் சும்மா.
Rate this:
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
07-டிச-202222:43:42 IST Report Abuse
Anantharaman Srinivasan அரசியல்வாதிகளுக்கு ஆட்டோ மீட்டர் போல தினமும் வரும்படி கொழிக்கணும். கொள்கை என்பதெல்லாம் இரண்டாம் பட்சஷம்.
Rate this:
Cancel
தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா
07-டிச-202221:48:55 IST Report Abuse
தியாகு முதலாவது போட்டோவில் அண்ணா, கலைஞர், சுடாலின் சிரிப்புகளை பார்க்கவும். டுமிழன்கள் எவ்வளவு இளிச்சவாயன்கள் என்றும் மாங்கா மடையர்கள் என்றும் தெரியவரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X