டில்லி மாநகராட்சியை கைப்பற்றியது ஆம்ஆத்மி

Updated : டிச 07, 2022 | Added : டிச 07, 2022 | கருத்துகள் (59) | |
Advertisement
புதுடில்லி: டில்லி மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 134 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் 15 ஆண்டுகளாக மாநகராட்சியை தன்வசப்படுத்தி இருந்த பா.ஜ.,விடம் இருந்து டில்லி மாநகராட்சியை ஆம்ஆத்மி கைப்பற்றியுள்ளது.டில்லியில் 3 மாநகராட்சிகளும், மொத்தம் 272 வார்டுகளும் இருந்தன. இந்நிலையில் 3 மாநகராட்சிகள் ஒன்றாக இணைக்கப்பட்டன. அதன்படி வார்டுகளும் 250 ஆக
DelhiMCDPolls, AAP, Wins, BJP, Congress, டில்லி, மாநகராட்சி தேர்தல், ஆம்ஆத்மி, வெற்றி, பாஜக, பாஜ, காங்கிரஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: டில்லி மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 134 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் 15 ஆண்டுகளாக மாநகராட்சியை தன்வசப்படுத்தி இருந்த பா.ஜ.,விடம் இருந்து டில்லி மாநகராட்சியை ஆம்ஆத்மி கைப்பற்றியுள்ளது.

டில்லியில் 3 மாநகராட்சிகளும், மொத்தம் 272 வார்டுகளும் இருந்தன. இந்நிலையில் 3 மாநகராட்சிகள் ஒன்றாக இணைக்கப்பட்டன. அதன்படி வார்டுகளும் 250 ஆக சுருக்கப்பட்டன. இந்த நிலையில் 250 வார்டுகளுக்கான டில்லி மாநகராட்சி தேர்தல் கடந்த 4ம் தேதி நடைபெற்றது.


அதில் 50.47 சதவீத ஓட்டுகளே பதிவானது. இதன் ஓட்டு எண்ணிக்கை இன்று (டிச.,7) நடந்தது. துவக்கத்தில் பா.ஜ., சற்று முன்னிலை வகித்த நிலையில், அடுத்தடுத்த சுற்றுகளில் ஆம்ஆத்மி கட்சி அதிக இடங்களில் முந்தி சென்றது.latest tamil news


ஓட்டு எண்ணிக்கை முடிவில்


ஆம் ஆத்மி கட்சி - 134 வார்டுகளிலும்


பா.ஜ., - 104 வார்டுகளிலும்


காங்கிரஸ் - 9 வார்டுகளிலும்


சுயேச்சைகள் - 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர்.


பெரும்பான்மைக்கு தேவையான 126 இடங்களை விட ஆம்ஆத்மி கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று, டில்லி மாநகராட்சியை அக்கட்சி கைப்பற்றியது. இதன்மூலம் கடந்த 15 ஆண்டுகளாக டில்லி மாநகராட்சியை தன்வசம் வைத்திருந்த பா.ஜ.,விடம் இருந்து ஆம்ஆத்மி முதன்முறையாக கைப்பற்றியது.


டில்லி மாநகராட்சியை ஆம் ஆத்மி கைப்பற்றியதை தொடர்ந்து, டில்லி முழுவதும் அக்கட்சி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆம் ஆத்மி நிர்வாகிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (59)

07-டிச-202220:29:58 IST Report Abuse
அப்புசாமி பா.ஜ வும், துணை நிலை ஆளுனரும்நாடு நலனுக்காக டில்லி மாநகராட்சி நிர்வாகத்துடன் ஒத்துழைக்க வேண்டும்.
Rate this:
Suri - Chennai,இந்தியா
07-டிச-202221:32:59 IST Report Abuse
Suriஅது நடக்க சூரியன் மேற்கில் உதிக்க வேண்டும்...
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
07-டிச-202219:28:28 IST Report Abuse
M  Ramachandran குஜ்ரிவால் எப்போதுமென நம் விடியல் மாதிரி பொய் களைய அள்ளிவீசும் விடையா மூஞ்சி.சொந்த திறமையை இல்லாததினால் பிறர் மேல் குற்றம் சுமதி கொண்டேனா காலம் தள்ளுபவன் . நம்ம ராமதாஸ் மாதிரி செய்யா இல்லாத வாக்குறுதியாய் மக்களிடம் சொல்லி பிறகு குற்றத்தைய அடுத்தவர்மேனால் போட்டு தப்பிக்க வழி பார்ப்பான். பொய்யன் செய்யாவிட்டால் செருப்பால் அடியுங்கள் என்று கூறி எனமற்றும் பேர்வழி . இவனைய இங்கு புகழ்ந்து கொண்டிருக்கும் ....... இங்குள்ள விடியலுக்கு விடியலில் சோம்பு தூக்கும் பேர்வழிகள். அது தான் அதே எண்ணம் பிரிதிபலிக்கிறது .
Rate this:
Cancel
Mohan - Salem,இந்தியா
07-டிச-202217:03:02 IST Report Abuse
Mohan டெல்லியை முஸ்லிம்களின் கூடாரமாக மாற்றிய காங்கிரஸ் தான் இதற்கு முக்கிய காரணம். அதனால் தான் வெறுத்துப்போன நடுநிலை இந்துக்கள் ஓட்டுப்போட வரவில்லை என்பதை ஓட்டு சதவீதம் குறைந்ததில் இருந்து தெரிந்து கொள்ளலாம். சுத்தமான அரசியல் செய்வதாக கூறி ஆட்சிக்கு வந்த ஆம் ஆத்மி கட்சி முஸ்லீம்களின் காப்பாளராக மாறியது மட்டுமல்ல, பணம் படைத்த சீக்கியருக்காக மது பான கொள்கைகளில் சமரசமும் மாறுதலும் செய்துள்ள கெஜ்ரிவால் சாமர்த்தியத்தில் கலைஞர் பாணியை கடைப்பிடித்து பயங்கர வெற்றி பெற்றுள்ளார் .அதாவது ஊழல் நிறைய நடக்கும்.....ஆனால் பரவலாக மிக அதிகம் பேர் பங்கெடுத்திருப்பார்கள். ஆணிவேரையோ ஆரம்பித்தவரையோ கண்டே பிடிக்க முடியாது. தெலுங்கானா காரரும் இந்த பாணியில் பயணம்... எப்படி சாமர்த்தியம்?
Rate this:
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
07-டிச-202217:13:06 IST Report Abuse
Apposthalan samlinமாநகராட்சி தேர்தலில் ஏவம் வோட் எந்திரம் கிடையாது...
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
07-டிச-202218:50:40 IST Report Abuse
கல்யாணராமன் சு.\\மாநகராட்சி தேர்தலில் ஏவம் வோட் எந்திரம் கிடையாது......\\ அப்போ தமிழ்நாட்டிலே திருடர்கள் கழகமும், அல்லக்கை கட்சிகளும் ஜெயிச்சது EVM மெஷினாலே இல்லியா? பேப்பர் வோட்டா? இல்லை கள்ள வோட்டா??? எத்தனை நாளைக்கு இந்த EVM மாவையே அரைப்பீங்க?? உங்களுக்கே அது ஒரு போராத் தெரியலையா ??...
Rate this:
TRUBOAT - Chennai,இந்தியா
07-டிச-202223:21:30 IST Report Abuse
TRUBOATநாளை மதவாத கட்சி தேர்தலில் ஜெயிக்கும் போது தெரியும் என்ன தகுடுத்ததோம் செஞ்சாங்கன்னு......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X