வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: விலைவாசி உயர்வு, பணவீக்கம், சீன ஊடுருவல் குறித்த விவகாரங்களை பார்லிமென்டில் எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் இன்று(டிச.,7) துவங்கியது. வரும் 29 ம் தேதி வரை நடக்கும் இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் இந்த கூட்டத்தொடர் குறித்தும், எதிர்க்கட்சிகளின் நிலைபாடு மற்றும் செயல்படும் விதம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அலுவலகத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடந்தது.
கார்கே தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், காங்கிரஸ், திமுக , கூட்டணி கட்சிகள் மற்றும் திரிணமுல் காங்கிரஸ் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், பணவீக்கம், விலைவாசி உயர்வு, வேலையின்மை, மத்திய விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துதல், கவர்னர் மற்றும் துணை நிலை கவர்னர்களின் செயல்பாடு, சீன ஊடுருவல் குறித்து பார்லிமென்டில் கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.