ஜல்லிக்கட்டு தமிழக கலாசாரத்தின் ஒரு பகுதி: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

Updated : டிச 07, 2022 | Added : டிச 07, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
புதுடில்லி: ஜல்லிக்கட்டு தமிழகத்தின் அடிப்படை உரிமை மற்றும் கலாசாரத்தின் ஒரு பகுதி என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.தமிழக அரசின் ஜல்லிக்கட்டு அனுமதி சட்டம் மற்றும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை கோரி, பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி கே.எம்.ஜோசப்
Jallikattu, Supreme Court, TN Govt, ஜல்லிக்கட்டு, தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட், உச்சநீதிமன்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: ஜல்லிக்கட்டு தமிழகத்தின் அடிப்படை உரிமை மற்றும் கலாசாரத்தின் ஒரு பகுதி என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.



தமிழக அரசின் ஜல்லிக்கட்டு அனுமதி சட்டம் மற்றும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை கோரி, பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.


இன்றைய (டிச.,7) விசாரணையின் போது, ல்லிக்கட்டு என்பது மனிதர்களின் நன்மைக்கானதாக இருக்க முடியுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.



latest tamil news

இதற்கு தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், ‛ஜல்லிக்கட்டு தமிழகத்தின் அடிப்படை உரிமை மற்றும் கலாசாரத்தின் ஒரு பகுதி. ஒரு குறிப்பிட்ட நடைமுறை அவசியமானதா இல்லையா என்று நீதிமன்றம் எவ்வாறு தீர்மானிக்க முடியும்?


ஐல்லிக்கட்டு துவங்கும் முன் காளைகள் மருத்துவர்களால் முழுமையாக பரிசோதனை செய்யப்படுகின்றன. கடுமையான விதிமுறைகள் வகுக்கப்பட்டு, பல சிறந்த நடைமுறைகளும் பின்பற்றப்பட்ட பிறகே ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது' என வாதிட்டார்.



latest tamil news

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‛ஜல்லிக்கட்டிற்கு முன்பு கால்நடை மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்படும் காளைகள், ஐல்லிக்கட்டிற்கு பிறகு பரிசோதனை செய்யப்படுகிறதா?' என கேள்வி எழுப்பினர்.


இதற்கு பதிலளித்த வழக்கறிஞர், ‛ஜல்லிக்கட்டு துவங்கும் முன் சோதனை நடத்துவது போல் போட்டிக்கு பின்னரும் சோதனை நடத்த தயார்.


ஜல்லிக்கட்டை தொடர்ந்து நடத்த உச்சநீதிமன்றம் வேண்டுமானால் தேவைப்பட்டால் கூடுதல் விதிமுறைகளை வழங்கலாம். கூடுதல் விதிமுறைகளை வழங்கினால் அதனை பின்பற்ற தயார்' எனக் கூறி தனது தரப்பு வாதத்தை நிறைவு செய்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (9)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
08-டிச-202204:18:05 IST Report Abuse
J.V. Iyer திராவிஷ அரசிற்கு வாதம்தான். போராளி மக்கள் ஜல்லிக்கட்டு வேண்டி இப்போது கலவரம் செய்வாய்ங்களா?
Rate this:
Cancel
rama adhavan - chennai,இந்தியா
07-டிச-202221:19:34 IST Report Abuse
rama adhavan மாடுகள் உழவு, மாட்டுவண்டி முதலிவற்றுக்கு மட்டுமே முன்பு தமிழ்நாட்டில் பயன்பட்டன. எனக்கு தெரிந்தவரை 2010க்கு முன் ஜல்லிக்கட்டு என்ற ஒன்றே இல்லை. அப்போதும் பொலி காளைகள் இருந்தன. பழையகோட்டை காளைகள் மிக பிரபலம். இப்போது மாடுகளுக்கு அவ்வளவு வேலை இல்லை. எனவே ஜல்லிக்கட்டு பழைய கலாச்சாரம் என்னும் பெயரில் மாடுகளை பந்தயங்களில் ஓட விடுகிறார்களோ? இப்போது நடப்பது பண்டைக்கால ஜல்லிக்கட்டு போலவும் தெரியவில்லையே?
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
07-டிச-202220:37:56 IST Report Abuse
அசோக்ராஜ் காஃபீர்களைக் கொல்வதும் கலாச்சாரம் தான். பார்த்து செய்யுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X