வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் மீது 56 வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளதாக பார்லிமென்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பார்லிமென்ட்டில், மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கை: 2017 முதல் 2022 அக்.,31 வரை நாடு முழுவதும் எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் மீது சி.பி.ஐ., அமைப்பு 56 வழக்குகளை பதிவு செய்துள்ளது. அதில் 22 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதில், ஆந்திராவை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீது 10, தமிழகத்தை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீது 4 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.