இனி எல்லாமே அதிரும்..டபுள் பவருல வரப்போகுது புல்லட் 650!

Updated : டிச 07, 2022 | Added : டிச 07, 2022 | |
Advertisement
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் விரைவில் 650 சிசி இன்ஜின் உடன் புதிய புல்லட் பைக்கை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்தியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பிராண்ட் என்றாலே அது ராயல் என்ஃபீல்டு தான். இந்நிறுவனத்திற்கு இவ்வளவு பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது அதன் முதல் மாடலான புல்லட் பைக் என்றே சொல்லலாம். நம்ம ஊர் பெருசுகள் முதல் இளசுகள் வரை பண்ணையார் முதல்
Dinamalar, Automobiles, RoyalEnfield Bullet650, தினமலர், ராயல் என்ஃபீல்டு புல்லட் 650

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் விரைவில் 650 சிசி இன்ஜின் உடன் புதிய புல்லட் பைக்கை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பிராண்ட் என்றாலே அது ராயல் என்ஃபீல்டு தான். இந்நிறுவனத்திற்கு இவ்வளவு பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது அதன் முதல் மாடலான புல்லட் பைக் என்றே சொல்லலாம். நம்ம ஊர் பெருசுகள் முதல் இளசுகள் வரை பண்ணையார் முதல் அண்ணாச்சி வரை பட்டி தொட்டியெங்கும் கொடிகட்டி பறந்த புல்லட் பைக் காலம் மாற மாற கிளாசிக், எலெக்ட்ரா, தண்டர்பேர்டு, உள்ளிட்ட ஏராளமான புதுப்புது மாடல்களின் வருகையால் காணாமல் போனது. ஆனால் “வயசானாலும் சிங்கம்.. சிங்கம் தான சார்” என்பதை போல பழசானாலும் இன்றும் புல்லட் பைக்கின் மவுசு குறையவில்லை..



latest tamil news


தற்போது புல்லட் பைக் அப்டேட் செய்யப்பட்ட பல்வேறு வேரியண்ட்களில் விற்பனையாகி வருகிறது. நீண்ட ஆண்டுகளாக 350 சிசி செக்மெண்டில் மட்டும் விற்பனையாகி வருகிறது. அதுமட்டுமல்லாமல், ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 650சிசி செக்மெண்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அந்த வரிசையில் சமீபத்தில் கூட் சூப்பர் மீட்டியோ 650 பைக்கை அறிமுகப்படுத்தியது. இதைத்தொடர்ந்து, சமீபத்தில் வெளியாகியுள்ள தகவலின் படி ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது புல்லட் 350 பைக்கை அடிப்படையாக கொண்டு புதிதாக 650 சிசி இன்ஜின் கொண்ட ஒரு புல்லட் மாதிரியான பைக்கை உருவாக்க முடிவு செய்துள்ளது.



latest tamil news


இந்த பைக்கின் இன்ஜினை பொருத்தவரை இதே செக்மென்டில் உள்ள மற்ற பைக்குகளின் இன்ஜினான 648 சிசி பேரலல் ட்வின் சிலிண்டர், ப்யூயல் இன்ஜெக்டர் இன்ஜின் பொருத்தப்படலாம். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 47 பிஎச்பி பவரையும், 52 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். அதோடு, இந்த இன்ஜின் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இதுதவிர, ஸ்லிப்பர் கிளட்ச், டூயல் சேனல் ஏபிஎஸ் சிஸ்டம், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கலாம்.



latest tamil news


ஆனால், வரவிருக்கும் ராயல் என்ஃபீல்டு புல்லட் 650சிசி பைக் குறித்த முழுமையான தகவல் வெளியாகவில்லை. ஏற்கனவே 350சிசி-யில் நல்ல விற்பனையை எட்டிய புல்லட், இதைவிட பவர்ஃபுல்லான இன்ஜினுடன் வெளிவந்தால் நிச்சயம் அமோக விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X