வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோவை: கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக மேலும் 3 பேரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர்.
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், அக்.,23 நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பொறியியல் பட்டதாரி ஜமேஷா முபின்(29) பலியானார். அவரது வீட்டில் நடந்த சோதனையில் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா, முகமது அசாருதின், கோவை ஜிஎம் நகர் பகுதியை சேர்ந்த முகமது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் மற்றும் அப்சர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கைதானவர்களை என்ஐஏ அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். நீதிமன்ற காவலில் பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கில் மேலும் 3 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். முகமது தவுபிக்(25) , உமர் பரூக் (39) மற்றும் பெரோஸ் கான்(28) ஆகியோரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.