இந்திய மக்களுக்கு சேவை செய்வதே இந்திய வெளியுறவு கொள்கை: ஜெய்சங்கர்

Updated : டிச 07, 2022 | Added : டிச 07, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
புதுடில்லி: இந்திய மக்களின் அன்றாட வாழ்க்கையில் வெளியுறவு கொள்கையானது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்திய மக்களுக்கு சேவை செய்வதே இந்தியாவின் வெளியுறவு கொள்கை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.ராஜ்யசபாவில் அவர் பேசியதாவது: நீண்ட கால நட்பு ராணி எலிசபெத் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள, ஜனாதிபதி திரவுபதி முர்மு முதல் அரசு முறை பயணமாக
jaishankar, india, narendramodi, foreign policy, people, foreign minister, வெளியுறவு அமைச்சர், ஜெய்சங்கர், வெளியுறவு கொள்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: இந்திய மக்களின் அன்றாட வாழ்க்கையில் வெளியுறவு கொள்கையானது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்திய மக்களுக்கு சேவை செய்வதே இந்தியாவின் வெளியுறவு கொள்கை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.


ராஜ்யசபாவில் அவர் பேசியதாவது:


நீண்ட கால நட்பு

ராணி எலிசபெத் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள, ஜனாதிபதி திரவுபதி முர்மு முதல் அரசு முறை பயணமாக பிரிட்டன் சென்றார். கம்போடியாவில் நடந்த ஆசியான் மாநாட்டில், இந்திய பிரதிநிதியாக துணை ஜனாதிபதி பங்கேற்றார்.


கத்தாரில் உலக கோப்பை கால்பந்து தொடரின் துவக்க விழாவில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் கலந்து கொண்டார். 8.5 லட்சம் இந்தியர்கள் வசிக்கும் அந்நாட்டுடனான இந்தியாவின் நீண்ட கால நட்பை எடுத்து காட்டுகிறது. ஜப்பானிய முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே இறுதிச்சடங்கில், பிரதமர் மோடி கலந்து கொண்டார். ஜப்பானின் நட்பு நாடு இந்தியா என்ற முறையில் மோடி பங்கேற்றார்.உறுதி

சமர்கண்ட்டில் நடந்த மாநாட்டில் பேசிய பிரதமர், இது யுத்தத்திற்கான சகாப்தம் இல்லை என்றார். இந்த அறிக்கையானது, உக்ரைன் மோதலை மனதில் வைத்து கூறப்பட்டது. பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியில் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.


latest tamil news


சிறப்பு விருந்தினர்

குடியரசு தின விருந்தினராக எகிப்து அதிபர் அப்தேல் படா எல் சிசி கலந்து கொள்ள உள்ளார்.வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலனுக்கான இரண்டு நாள் மாநாடு, இரண்டு ஆண்டு இடைவெளியில் வரும் ஜன., மாதம் 8 முதல் 10 வரை நடக்கிறது. இந்த மாநாட்டில், கயானா அதிபர் இர்பான் அலி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.ஒரு மித்த கருத்து

ஜி20 கூட்டங்கள் இந்தியாவில் ஏற்கனவே துவங்கிவிட்டது. அதில், 200 கூட்டங்களை இந்தியாவில் பல இடங்களில் நடத்த ஏற்பாடு செய்வதே எங்களின் முயற்சி. ஜி20 மாநாடு, இந்தியாவால் நடத்தப்படும் மிக உயர்ந்த சர்வதேச கூட்டமாக இருக்கும்.


இதனை ஒரு தேசிய முயற்சியாக பார்க்கிறோம். இந்திய வரலாற்றை பகிர்வதில் முக்கியத்துவம் அளிக்கப்படும். இந்தியா தலைமையில், ஒருமித்த கருத்தை உருவாக்கி நிகழ்ச்சியை வடிவமைப்பதற்கு முயற்சி எடுத்து வருகிறோம். இந்த கூட்டமானது உலகுக்கு இந்தியாவை எடுத்து காட்டும்.latest tamil news


சாதாரணமானது அல்ல

வெளியுறவு கொள்கை என்பது, அமைச்சகத்தின் செயல்பாடு அல்லது அரசின் சாதாரண செயல்பாடு அல்ல. இது அனைத்து இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சவாலான சூழ்நிலையில், இந்திய மக்களின் நலனை உறுதி செய்ய வேண்டும் என்பதே எங்கள் முயற்சி. இந்திய மக்களுக்கு சேவை செய்வதே இந்திய வெளியுறவு கொள்கை. அந்த பொறுப்பை நிறைவேற்ற என்ன வேண்டுமானாலும் செய்வோம்.ஆதரவு

தமிழ் மக்கள், சிங்கள மற்றும் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய முழு இலங்கைக்கும் இந்தியா ஆதரவை வழங்கி உள்ளது. கடுமையான பொருளாதார சூழ்நிலையில் சிக்கியுள்ள அண்டை நாட்டிற்கு ஆதரவு வழங்குவதில் நாம் வகுப்புவாத அணுகுமுறையை எடுக்கவில்லை.


பாலஸ்தீன கொள்கை விவகாரத்தில் இந்தியா தெளிவாக உள்ளது. இரு தரப்பு மக்களும் அமைதியான வாழ்க்கை வாழவதற்கான ஒப்பந்தத்தை இந்தியா ஆதரிக்கிறது. பாலஸ்தீன அகதிகள் நல அமைப்புக்கான நமது நிதியுதவி அதிகரித்துள்ளது.விவேகமான கொள்கை

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க வேண்டும் என நாங்கள் கூறவில்லை. சிறந்த வாய்ப்புகள் எங்கு உள்ளதோ அங்கு வாங்கும்படி கூறினோம். இந்திய மக்களின் நலனுக்காக சிறந்த ஒப்பந்தம் கிடைக்கும் இடத்திற்கு செல்வது விவேகமான கொள்கை.சீன விவகாரம்

எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் தன்னிச்சையாக மாற்ற முயற்சிக்கும் நடவடிக்கையை ஏற்று கொள்ள மாட்டோம் என சீனாவிடம் தூதரக ரீதியில் தெளிவாக கூறிவிட்டோம். ஆனால், அவர்கள் அதனை தொடர்ந்து செய்து படைகளை குவித்தால், எல்லை பகுதியில் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு வழக்கமானதாக இல்லை என்று அர்த்தம். கடந்த சில நாட்களாக இது தெரிகிறது. இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (8)

japaankaaran - Tokyo,ஜப்பான்
08-டிச-202204:48:45 IST Report Abuse
japaankaaran ஏர்போர்ட்ல இருக்குற இமிகிரேஷன் ஆபீஸர்கள்கள் இந்தியர்களுக்கு சூப்பரா சேவை செய்ராங்க எவ்வளவு கேவலமா மக்களை நடத்துறாங்கன்னு சிசிடிவில பாருங்க நீங்க கண்டுக்க மாட்டீங்களா?
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
08-டிச-202204:38:24 IST Report Abuse
J.V. Iyer ஒரு தலை சிறந்த தலைவர் மோடிஜிக்கு உள்ள நவரத்தின அமைச்சர்களில் ஒரு ரத்தினம் வெளியுறவு அமைச்சர். இங்கே நாம கவலையை விட்டு சன் டிவி செய்திகள் பார்க்கலாம். அவரு பாத்துக்குவார்.
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
07-டிச-202223:21:12 IST Report Abuse
g.s,rajan இந்தியாவில் விலைவாசியை சகட்டுமேனிக்கு ஏத்தி மக்களுக்கு சூப்பரா சேவை செய்யறீங்களே ,அது ஒண்ணே போதாதா மக்களின் மனம் குளிர .....???எதேஷ்டம் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X